»   »  பீப் பாடலுக்குப் பின் மீண்டும் இணையும் சிம்பு- அனிருத்?

பீப் பாடலுக்குப் பின் மீண்டும் இணையும் சிம்பு- அனிருத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் பிரச்சினைக்குப் பின் சிம்பு - அனிருத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகிறதே தவிர சற்றும் குறைந்தபாடில்லை.இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனிருத் தற்போது வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு-அனிருத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Smbu- Anirudh Join Hands Again?

மஹத் ராகவேந்திரா, செட்னா இருவரும் இணைந்து நடிக்கும் ஷீ (she) என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெறும் 2 பாடல்களை இவர்கள் இருவரும் சேர்ந்து பாடவிருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கான முயற்சிகளில் தற்போது படக்குழுவினர் மிகவும் தீவிரமாக இறங்கி இருக்கின்றனராம். மேலும் இருவருக்குமே பாடுவதில் விருப்பம் தான் என்றும் இது கூடிய விரைவில் சாத்தியமாகும் என்றும் நடிகர் மஹத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இப்படம் ஒரு திகில் திரைப்பட வகையைச் சார்ந்தது.நான் பப்பில் வேலை செய்யும் ஒரு இளைஞனாக நடிக்கிறேன். நான் நாயகியை சந்திக்கும்போது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறேன்.

அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை காமெடி, ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து சொல்வதே ஷீ படத்தின் கதை என்றும் மஹத் கூறியிருக்கிறார்.

இயக்குநர் பர்சா மகேந்திரா ஷீ படத்தை இயக்குகிறார். மஹத், செட்னாவுடன் இணைந்து ஸ்வேதா மேனன், சோனியா அகர்வால், தன்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பாம்பே போலே இசையமைக்கும் ஷீ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said After Beep Song Controversy Now Simbu and Anirudh Join Hands Again in Mahat Raghavendra's Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil