அடடா... புன்னகைக்கு வந்த சோதனையைப் பாத்தீங்களா?
திருமணத்துக்குப் பின்னும் நாயகியாகவே நடித்து வந்த புன்னகை நடிகைக்கு இப்போது சோதனை. ஹீரோயின் நிலையிலிருந்து அக்கா லெவலுக்கு இறங்கிவந்துவிட்டார்.
தற்போது தமிழில் கைவசம் படங்கள் இல்லாமல் போனதால், தெலுங்கு படவுலகம் பக்கம் போயிருக்கிறார். ஆனால் அங்கு தமிழைப் போல் கதாநாயகியாக வலம் வர முடியவில்லை நாயகியால்.
ஒரு படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அது கூட பரவாயில்லை, அக்கட பூமிதானே.. என்று நினைத்த நடிகைக்கு இன்னொரு ஷாக்.. ஹீரோயின் யார் தெரியுமா.. சமந்தா!
நம்மை விட பார்க்க சீனியராகத் தெரியும் இவருக்கு ஜோடியாக நடிப்பதா என்று நினைத்து முதலில் தயங்கிய புன்னகை, சரி.. வேலைதான் இல்லையே.. இதையாவது செய்வோம் என ஒப்புக் கொண்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications