“மீத்தேன்.. பற்றி எரியும் வயல்..” காப்பான் டீசர்ல இதை கவனிச்சீங்களா!

சூர்யாவின் காப்பான் பட டீசர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Actor Suriya Kaapaan Movie Reaction: காப்பான் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது- வீடியோ

சென்னை: சூர்யாவின் காப்பான் பட டீசரில் இடம்பெற்றுள்ள பல விஷயங்கள் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் காப்பான். மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசரை பார்க்கும்போது, காப்பான் திரைப்படம் தமிழ்நாட்டின் மீத்தேன் பிரச்சினை பற்றிய படமாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்:

விவசாயிகள் போராட்டம்:

விவசாயிகள் போராட்டம், போலீஸ் லத்தி சார்ஜ், "இயற்கையா உருவாகும் நதியை சொந்தம் கொண்டாட உரிமையை யார் கொடுத்தது" என சூர்யா ஆக்ரோஷமாக கேட்பது என டீசரில் உள்ள சில விஷயங்களை வைத்து பார்க்கும்போது, இதில் விவசாயிகள் பிரச்சினை குறித்து வலுவாக பேசப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஆர்யாவின் கேள்வி:

ஆர்யாவின் கேள்வி:

அதேபோல், "தமிழ்நாட்டை பாலைவனமா ஆக்கிட்டு, இந்தியாவை சூப்பர் பவரா ஆக்கப்போறீங்களா" என ஆர்யாவும் ஒரு காட்சியில் கேள்வி எழுப்புகிறார். இதுவும் படத்தின் கதை களத்தை தெளிவுப்படுத்துகிறது.

மீத்தேன் பிரச்சினை:

மீத்தேன் பிரச்சினை:

குறிப்பாக ஒரு காட்சியில் விவசாய நிலத்தில், ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது. முழு வயலும் எரியாமல், ஆங்காங்கே தீப்பற்றி எரியும் போதே, இது மீத்தேன் எரிவாயு தொடர்பான காட்சியாகத் தான் இருக்கும் என்பது புலப்படுகிறது.

விமர்சனம்:

விமர்சனம்:

எனவே தமிழ்நாட்டில் நிலவும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு, அதில் ரா ஆபிசர் கேரக்டரை புகுத்தி கே.வி.ஆனந்த் படத்தை உருவாக்கி இருப்பது தெரிகிறது. மேலும், மோகன் லால் இதில் பிரதமராக நடித்திருப்பதால், மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வேடம்:

இரண்டு வேடம்:

பொதுவாகவே கே.வி.ஆனந்த் படம் என்றாலே ஏதாவது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைக்களமாகவே இருக்கும். அந்தவகையில் இப்படமும் விவசாயிகளின் பிரச்சினைகளைப் பேசும் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. அதோடு, சூர்யா விவசாயி மற்றும் ரா அதிகாரி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது டீசரில் இருக்கும் காட்சிகள் மூலம் தெரிகிறது.

ஆக்சன் அதகளம்:

ஆக்சன் அதகளம்:

மேலும், ஒரு காட்சியில், ‘நீங்களே நக்சல் மாதிரி பேசுறீங்களே' என அதிகாரி ஒருவர் சூர்யாவைப் பார்த்துக் கேட்கிறார். அதன்மூலம் சூர்யா நிச்சயம் பாதுகாப்பு அதிகாரி என்பது உறுதியாகிறது. ஆனால், வேறொரு காட்சியிலோ சாயிஷா, சூர்யாவைப் பார்த்து தீவிரவாதி என்கிறார். இக்காட்சிகள் மூலம் விவசாயிகளுக்காக ரா அதிகாரி செய்யும் அதகளம் தான் படத்தின் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X