ரன்வீர் சிங், தீபிகாவை மரண கலாய் கலாய்த்த ஸ்மிருதி இரானி

By Siva

Recommended Video

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வீடியோ

மும்பை: நடிகை தீபிகா, நடிகர் ரன்வீர் சிங்கின் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகாததை மரண கலாய் கலாய்த்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியை தங்களின் திருமணத்திற்கு தேர்வு செய்தனர். அங்கு அவர்கள் நேற்று கொங்கனி முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

 புகைப்படம்

புகைப்படம்

தீபிகா, ரன்வீர் இத்தாலி சென்றதில் இருந்தே அவர்களின் திருமணம் தொடர்பான எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. திருமணம் நடக்கும் இடத்தில் பயங்கர கெடுபிடி உள்ளது. விருந்தினர்கள் கூட புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்களின் திருமண புகைப்படங்களை அவர்களே வெளியிட்டால் தான் உண்டு.

 எரிச்சல்

எரிச்சல்

ரன்வீர், தீபிகாவின் திருமண புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் ஒரு புகைப்படம் கூட வெளியாகாததால் காத்திருந்து காத்திருந்து அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானி

ரன்வீர், தீபிகா திருமண புகைப்படங்களை பார்க்க காத்திருந்து எலும்புக்கூடாகிவிடுவோம் என்பது போன்று புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் போட்டு கலாய்த்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

பாராட்டு

பாராட்டு

ஸ்மிருதி இரானியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் மேடம், நாங்க நினைத்ததை தான் நீங்கள் போஸ்ட் செய்துள்ளீர்கள். ஒரு புகைப்படத்தை கூட வெளியிடாமல் ஓவராக செய்கிறார்களே என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X