இனி திருமணம் நடக்காது.. ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் திருமணம் கேன்சல்.. காரணம் என்ன?
சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடனான தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். ஆறு ஆண்டுகளாக நீடித்த இவர்களது காதல் உறவு முடிவுக்கு வந்துள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா ஒன்றில் ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல்
இருவரும் ஜோடியாக கலந்து கொண்டார்கள். அதைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஸ்மிருதியின் பிறந்தநாளுக்கு பலாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Happy Birthday Queen" எனப் பதிவிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதற்கு ஸ்மிருதி "Thank you" என பதிலளித்திருந்தார். அதே ஆண்டு, பலாஷின் பிறந்தநாளுக்கு ஸ்மிருதி, அவரை "dear favourite human" என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருந்தார்.

ஸ்மிருதி மந்தனா: இதையடுத்து, இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஒரு போட்டியில் சதம் அடித்த பிறகு, ஸ்மிருதி மந்தனா தனது பேட்டை பார்த்து பலாஷ் முச்சல் பெயரைச் சொல்லிக்கொண்டே தனது சதத்தை அவருக்கு அர்ப்பணித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அது பெரும் பாராட்டைப் பெற்று ரசிகர்கள் இவர்கள் கொண்டாடினார்கள்.
திருமணம் நின்றது: அதன் பின் இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 23ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருந்தனர். திருமணத்தின் போது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் ஸ்மிருமி தனது இன்ஸ்டாகிராமம் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த போட்டோ, பலாஷ் முச்சலுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை டெலிட் செய்து இருந்தார். அதன் பின், பலாஷ் முச்சல் நடன இயக்குனர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியானது.
இனி திருமணம் நடக்காது : இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராமில், திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி நிறைய யூகங்கள் உள்ளன. இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக பேசுவது முக்கியம் என நினைக்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட நபர், என் வாழ்க்கையை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்தை இதோடு நிறுத்தி வைக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனி உரிமையையும் மதிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். என்னால் முடிந்தவரை இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடி கோப்பைகளை வெல்வேன் என்று நம்புகிறேன் என்று ஸ்மிருதி பதிவிட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு: ஸ்மிருதி மற்றும் பலாஷ் இருவரின் வேலைப்பளு, தங்கள் தொழில் வாழ்க்கையை ஒரு சவாலாக ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே பிரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இருவரும் தங்கள் உறவை மீண்டும் தொடங்க முயற்சி செய்தனர். ஆனால், அது முடியாமல் போய்விட்டது என அவர்களின் நெருங்கிய நண்பர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனைக்கும், திறமையான இசையமைப்பாளருக்கும் இடையே மலர்ந்த இந்தக் காதல் பயணம் எதிர்பாராதவிதமாக முடிவுக்கு வந்திருப்பது அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











