ஸ்மிருதி மந்தனாவின் அப்பா வீட்டுக்கு வந்தாச்சு.. மாப்பிள்ளை மாட்டிகிட்டாரா? ஏன் இந்த சைலண்ட்?

சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஸ்டார் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா, திருமண விழாவின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்மிருதி மந்தானாவுக்கு இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுடனான திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23 ஆம் தேதியில் கோவாவில் நடைபெற இருந்த திருமணத்திற்கு சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த போது, ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை தற்போது, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டால் இணையவாசிகள் மத்தியில் தற்போது பல கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இதனால் திருமண விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஸ்மிருதியின் மேனேஜர் துஹின் மிஸ்ரா கூறுகையில், "ஸ்மிருதி தெளிவாகக் கூறியுள்ளார், தந்தை முழுமையாக குணமடையும் வரை திருமணம் நடைபெறாது" என்றார். மேலும், பலாஷ் முச்சால் தான் முதலில் இந்த முடிவை எடுத்ததாக அவரது தாய் அமிதா முச்சால் கூறியுள்ளார். ஸ்ரீனிவாஸ் மந்தனாவுடன் பலாஷுக்கு ஆழமான காதல் இருப்பதால், இந்த சம்பவம் அவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தது, வைரஸ் தொற்று மற்றும் கடினமான உடல்சோர்வு காரணமாக முச்சாலும் கூட தற்காலிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Smriti Mandhana Father Coming Hme After Heart Attack Treatment Netizens Ask Some Ugly Questions about Palaash Muchhal

வீடு திரும்பிய மந்தனாவின் அப்பா: தற்போது அவர் மும்பைக்கு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிலர் "பலாஷ் ஸ்மிருதியை ஏமாற்றிவிட்டார், திருமணம் நிற்கவில்லை என்று சிலர் கூறி வருகிறார்கள்" என்ற இணையவாசிகள் பலரும் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். ஆனால், இது தவறான தகவல். பலாஷ் முச்சால் ஸ்மிருதியின் தந்தையின் உடல் நலனுக்காக திருமணத்தை முதலில் ஒத்தி வைக்க விரும்பினார், அது அவர்களின் உண்மையான காதலை வெளிப்படுத்துகிறது. திருமணம் மீண்டும் தேதி அறிவிக்கப்படும் வரை, ஸ்ரீனிவாஸ் மந்தனாவின் விரைவான குணமடைவதற்காக அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

குழப்பும் இணையவாசிகள்: என்னதான் ஸ்மிருதி மந்தனா தரப்பில் இருந்தும், முச்சால் தரப்பில் இருந்தும் அவர்களின் மன நிலை குறித்த விளக்கங்களை கொடுத்தாலும், இணையவாசிகள் அமைதியாக இருக்கமால், முச்சால் ஏதோ ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகினார் என்றும், அவருடன் இவர் அனுப்பிய மெசேஜ்கள் இவைதான் என்றும் சில ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்து வருகிறார்கள். இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தாலும், இணையவாசிகள் மேலும் புகைச்சலை கிளப்பி வருகிறார்கள்.

Smriti Mandhana Father Coming Hme After Heart Attack Treatment Netizens Ask Some Ugly Questions about Palaash Muchhal

அர்த்தமற்ற கேள்விகளும் பதிலடிகளும்: அதாவது, மந்தனாவின் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனாலும் திருமணம் எப்போது என்பதை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும், முச்சால் குறித்து பரவி வரும் ஸ்கிரீன் ஷாட்கள் உண்மையா என்றும் புகைச்சலை கிளப்பும் இணையவாசிகளும் இருக்கிறார்கள். இப்படியானவர்களுக்கு, சில ரசிகர்கள், இப்போதுதான் வீட்டிற்கே வந்துள்ளார்கள். அவர் முழுவதுமாக குணமடைய வேண்டும், ஸ்மிருதி மந்தனா மற்றும் முச்சாலுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கிறது. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X