அமிதாப் பச்சன் நிகழ்ச்சியை புறக்கணித்த ஸ்மிருதி மந்தனா.. பெரிய பஞ்சாயத்தே நடந்திருக்கும் போலயே?
சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்ற பின்னரும் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கௌன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் உலகக் கோப்பை சிறப்புத் தொடரின் (KBC Women's Cricket Special Episode) படப்பிடிப்பில் ஸ்மிருதி மந்தனா பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு எபிசோடில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனைகள் அமிதாப் பச்சனுடன் ஹாட் சீட்டில் அமர்ந்து விளையாட உள்ளனர்.
ஆங்கில ஊடகங்களின் தகவலின் படி, அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கௌன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் மகளிர் உலகக் கோப்பை சிறப்பு எபிசோட் படப்பிடிப்பில் ஸ்மிருதி மந்தனா பங்கேற்கவில்லை. நேற்று அதாவது நவம்பர் 26 அன்று மும்பையின் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் அவர் இடம்பெறாதது உறுதியாகியுள்ளது. அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறப்பு எபிசோடில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, சினே ராணா ஆகிய வீராங்கனைகளுடன் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரும் கலந்து கொண்டனர். ஸ்மிருதி மந்தனா மட்டும் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் ரியாக்ஷன்: ஸ்மிருதி மந்தனா KBC சிறப்பு எபிசோடில் வரப்போவதில்லை என்ற செய்தி வெளியானதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆறுதல் தெரிவித்து, தைரியம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, "Stay strong Smriti, you are a lioness", "நாங்கள் எப்போதும் உன்னோடு இருக்கோம் ஸ்மிருதி", "இது உன்னை ஒடுக்காது, நீ இன்னும் வலிமையோடு திரும்பி வருவாய்" என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தைரியம் கமெண்ட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
மற்றொரு காரணம் இதுவா?: அதே நேரத்தில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றதற்கு காரணம், அவரது தந்தைக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான். அதே நேரத்தில் இணையவாசிகள் பலரும் இசையமைப்பாளர் பலேஷ் முச்சால் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்தது தெரிந்ததாலும் தான் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











