சத்யராஜிடம் தான் அதை கத்துக்கிறேன்.. தடம் நாயகி ஸ்முருதி வெங்கட்!
சென்னை : சத்யராஜிடம் நடிக்க கற்றுக் கொள்கிறேன் தடம் பட நாயகி ஸ்முருதி வெங்கட் கூறியுள்ளார்.
ஸ்முருதி வெங்கட் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வரும் நாயகி. இவர் தடம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக ரசிகர்களை சென்றடைந்தார். இவர் சில படங்களில் சின்ன சின்ன பெயர் சொல்லபடாத கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஸ்முருதி வெங்கட் தற்போது தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அப்பா மகளின் கதையை பற்றிய படமாகும். இதில் தனி நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்முருதி வெங்கட். இவருக்கு தடம் படம் பெரிய வெற்றியை பதிவு செய்து தந்துள்ளது இதனிடையே தனது இரண்டாம் படத்திலே பெரிய கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது என சமீபத்தில் ஸ்முருதி கூறியிருந்தார் .

சத்யராஜ் நிறைய படங்களில் அப்பாவாக நடித்து இருக்கிறார். ஆனால் இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் போஸ்டர்களை பார்க்கும் போது வேறு மாதிரியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் . இந்த படம் தான் ஸ்முருதி நாயகியாக நடிக்கும் இரண்டாவது படம். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்முருதிக்கு பல இடங்களில் சத்யராஜ் நடிப்பு கற்று கொடுத்தாராம்.
ஸ்முருதி படத்தில் நடிக்கும் போது முக்கிய காட்சிகளில் உடன் இருந்த சத்யராஜ் எப்படி எந்த காட்சிகளுக்கு ரியாக்ட் செய்வது என்று பல விசயங்களை கற்று தந்தார் என்று நடிகை ஸ்முருதி கூறியுள்ளார்.

தடம் வெற்றி பல கண்களை ஸ்முருதி மேல் திருப்பியிருக்கிறது . ஆனால் இதுவரையில் ஸ்முருதிக்கு ஒரு கமர்ஷியல் பட வாய்ப்புகள் கூட வரவேயில்லை என்று சந்தோஷத்துடன் கூறினார். மேலும் நான் பார்க்க நல்ல பெண் போல் தெரிவேன் அதுதான் உண்மை நான் உண்மையிலே மிக அமைதியான நல்ல பெண் என்று கூறியுள்ளார் .

தீர்ப்புகள் விற்கபடும் படத்தில் சத்யராஜ், ஸ்முருதி வெங்கட்,மதுசூதன் ராவ், ஹரீஸ் உத்தமன், ரேணுகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் . படத்தை இயக்குனர் தீரன் இயக்கியிருக்கிறார். படத்தை தயாரித்து இருக்கிறார் சஞீவ் மீராசாகிப் ராவுத்தர்.


Click it and Unblock the Notifications











