சிநேகிதியே பட நடிகையை நியாபகம் இருக்கா? இப்பவும் ஜோதிகா கூட அதே நட்புதான்!

சென்னை: 2000ம் ஆண்டு ஜோதிகாவின் வித்தியாசமாக வெளியானத் திரைப்படம் சிநேகிதியே. இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்த நிலையில், அவரது தோழியாக சர்பானி முகர்ஜி நடித்திருந்தார். மேலும், இஷாதி அருண் தபு, ஸ்வேதா மேனன், லட்சுமி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். மனோரமா கேமியோ நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த சர்பானி முகர்ஜி இப்போது எப்படி இருக்கிறார் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிந்தாஸ்ட் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிநேகிதியே, முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஒரேயொரு ஆண் கதாபாத்திரமாக முன்னாள் ராணுவ வீரரும், பிரபல இயக்குநருமான மேஜர் ரவி கேமியோ ரோலில் நடித்திருந்தார். அவர் மட்டும் தான் படத்தில் நடித்த ஒரே ஒரு ஆண். மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷன் கதை எழுதி, இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

jyothika

சிநேகிதியே: கல்லூரியில் எதிர்பாராத விதமாக கொலை நடக்க, அந்த பழி, ஜோதிகா மற்றும் சர்பானி முகர்ஜி மீது விழுகிறார். இதனால், இணை பிரியாத தோழியாக இருந்த இவர்கள் பிரிந்து விட, பின் இதற்கு எல்லாம் காரணம் யார் என்று தேடும் போது, அதற்கான விடைகிடைக்கிறது. இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன போதும், இந்த படத்தில் இடம் பெற்ற தேவதை வம்சம் நீயோ பாடலும், ராதை மனதில் ராதை மனதிலும் பாடலும் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது.

அடையாளமே தெரியல: இந்த படத்தில் தோழிகளாக நடித்த ஜோதிகா மற்றும் சர்பான முகர்ஜி, படம் முடிந்த பிறகும் பல இடத்தில் தோழிகளாகவே சுற்றி வந்தனர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை, சர்பான, மலையாளம், இந்தி, போஜ்புரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்தது ஒரே ஒரு படமாக இருந்தாலும்,ரசிகர்கள் இவரை மறங்கவில்லை. தற்போது சர்பானி முகர்ஜி, ஆளே அடையாளம் தெரியாத அளவிக்கு மாறி இருக்கிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது. தற்போது மும்பையில் இருக்கும் ஜோதிகா, ஒரு நிகழ்ச்சியில் இவரை எதார்ச்சையாக சந்தித்து பேசி பழைய நட்புக்கு தீணிப்போட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: jyothika ஜோதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X