»   »  இது ஸ்னேகா-நாக் கதையல்ல

இது ஸ்னேகா-நாக் கதையல்ல

Subscribe to Oneindia Tamil

ஸ்னேகா நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஏன் இந்த மெளனம்படத்தின் கதை, நாக்ரவி-ஸ்னேகா காதலை மையமாகக் கொண்டதல்ல என்று அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தேவகுமார் ரெட்டி கூறியுள்ளார்.

தமிழில் ஏன் இந்த மெளனம் என்ற பெயரிலும், தெலுங்கில், மனசு பாலிகே மெளனராகம் என்ற பெயரிலும் உருவாகும் படத்தில் ஸ்னேகாவும், விசில் பட நாயகன்விக்கிரமாதித்யாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

நானும், ஸ்னேகாவும் காதலித்த கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம்எடுக்கப்படுகிறது. எனவே இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, சிலநாட்களுக்கு முன்பு ஸ்னேகாவின் காதலர் என்று கூறப்பட்ட மலேசியாவைச் சேர்ந்தநாக் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.இந் நிலையில் இப்படம் குறித்த சர்ச்சைக்கு தயாரிப்பாளர் தேவகுமார் ரெட்டிவிளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்படம் யாருடைய சொந்தவாழ்க்கையையும் வைத்து எடுக்கப்படும் அல்ல. படத்தின் மூலக் கதை, தலை சிறந்தசிந்தனையாளர் ஜே.கே.வின் (ஜே.கிருஷ்ணமூர்த்தி) சிந்தனைகளை அடிப்படையாகவைத்து எழுதப்பட்டது.
காதல் இருக்கும் இடத்தில் சுயநலம் இருக்காது. சுய நலம் இருக்கும் இடத்தில் காதல்இருக்காது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இப்படத்தின் கதை.உண்மையான அன்பு எது என்பதை சொல்லும் படம் இது.
தரமான கதையைக் கொண்ட இப்படத்தில் நவநாகரீக இளைஞர்களின்பிரதிநிதியாகவும், நற்குணம் உள்ளவராகவும் விக்கிரமாதித்யாவின் கேரக்டர்சித்தரிக்கப்பட்டுள்ளது.
வீணான சர்ச்சைகள் மூலம் கிடைக்கும் விளம்பரத்தால் படத்தை வெளியிடவிரும்பவில்லை. எனவே தற்போது வெளியாகியுள்ள சர்ச்சைகளுக்கு நாங்கள்பொறுப்பேற்க முடியாது என்று கூறியுள்ளார் ரெட்டி.

இதில் ஸ்னேகா தவிர அம்பிகா, லட்சுமி ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil