சினேகா-பிரசன்னா விவாகரத்தா?..அதிர்ச்சியில் ரசிகர்கள்..பதறிப்போய் சினேகா போட்ட பதிவு!

சென்னை : நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னாவும்- சினேகாவும் விவாகரத்து செய்துவிட்டதாக பரவி வரும் செய்தியால் சினேகா பதறிப்போய் ஒரு பதிவினை போட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் என்னவளே மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

புன்னகை அரசி

புன்னகை அரசி

நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி என பெயர் எடுத்தார். வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சினேகா தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து 2011ம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

அழகான குடும்பம்

அழகான குடும்பம்

நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா- சினேகா இருவரும் தீபாவளி , பொங்கல் என எந்த விசேஷமாக இருந்தாலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

பதறிப்போன சினேகா

பதறிப்போன சினேகா

இந்நிலயில், நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும் செய்திகள் சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த செய்தியை பார்த்து பதறிப்போன சினேகா, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து 'ஹாப்பி வீக் எண்ட்'என பதிவு செய்துள்ளார். இதனால், விவாகரத்து இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் விஷமிகள் இது போன்ற வதந்தியை பரப்புவது சரியில்லை அவரது ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X