Sneha: ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் மாதிரி மாறிய பிரசன்னா.. அப்புறம் என்ன ஆச்சு?

சென்னை: ஹனிமூனில் கணவர் பிரசன்னாவிடம் நடிகை சினேகா போட்ட கண்டிஷன் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் ஹனிமூன் போட்டோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. கமல்ஹாசன், விஜய், அஜித், ராகவா லாரன்ஸ், மாதவன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதலில் விழுந்தனர். கடந்த 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களின் ஹனிமூன் கதையில் நடிகர் விஜய்யின் பெயரும் அடிபட்டு இருப்பது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Sneha and Prasanna honey moon had a super Vijay connectivity?

சிரிப்பழகி சினேகா: தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என பெயர் எடுத்தவர் நடிகை சினேகா தான். மாதவனின் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. ஆனந்தம், வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஜனா, ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

பிரசன்னாவுடன் திருமணம்: 2009ம் ஆண்டு பிரசன்னாவுடன் ஜோடி போட்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தார் சினேகா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர 2012ல் கோலாகலமாக இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த கையுடன் பிரசன்னாவும் சினேகாவும் நியூசிலாந்துக்கு ஹனிமூன் சென்றனர்.

ஹனிமூனில் பிரசன்னாவுக்கு வந்த ஆசை: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தின் பாடலில் நடிகர் விஜய் வெளிநாட்டில் Bungee jumping செய்திருப்பார். நியூசிலாந்துக்கு தேனிலவுக்கு சென்ற இடத்தில் பிரசன்னாவுக்கும் அப்படி செய்ய வேண்டும் என ஆசை வர தனது காதல் மனைவியிடம் அந்த ஆசையை கூறியிருக்கிறார்.

Sneha and Prasanna honey moon had a super Vijay connectivity?

சினேகா போட்ட கண்டிஷன்: பிரசன்னாவின் ஆசையை நிறைவேற்ற அனுமதி தர வேண்டும் என்றால் தனது பெயரை டாட்டூவாக போட்டுக் கொள்ள வேண்டும் என ஹனிமூன் சென்ற இடத்தில் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக சினேகா கண்டிஷன் போட்டுள்ளார்.

உடனடியாக அதற்கு என்னம்மா டாட்டூ தானே போட்டுக் கொண்டால் போச்சு, என பிரசன்னாவும் அங்கே ஒரு டாட்டூ கடையை தேடிப் பிடித்து சினேகாவின் பெயரை பச்சைக் குத்திக் கொண்டாராம். பின்னர், பிரசன்னாவுடன் இணைந்து சினேகாவும் Bungee jump பண்ணியுள்ளார். அந்த அரிதான புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X