குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்.. ஸ்நேகா -பிரசன்னாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!
திருப்பதி : நடிகர் பிரசன்னா மற்றும் ஸ்நேகா தம்பதி கோலிவுட்டின் சிறப்பான ஜோடியாக காணப்படுகின்றனர்.
இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர்.
இவர்கள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவர்களாக காணப்படுகின்றனர். இவர்களின் நடிப்பு எப்போதும் ரசிகர்களால் அதிகமான விரும்பப்படுகின்றன.

பிரசன்னா -ஸ்நேகா தம்பதி
நடிகர் பிரசன்னா மற்றும் ஸ்நேகா இருவரும் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக ஸ்நேகா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். கமலுடனும் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து இவர் திருமணம் செய்துக் கொண்டார்.

2009ல் இணைந்து நடித்த ஜோடி
தெலுங்குப் படம் ஒன்றில் ஸ்நேகாவின் நடிப்பை பார்த்து அசந்துப் போய் தான் தான், அவர் மீது காதலில் விழுந்ததாக முன்னதாக பேட்டியொன்றில் நடிகர் பிரசன்னா கூறியிருந்தார். கடந்த 2009ல் இவர்கள் இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில்தான் இணைந்து நடித்தனர். இதையடுத்தே இவர்கள் இருவருக்கும் காதல் பிறந்தது.

ஸ்நேகா -பிரசன்னா திருமணம்
தொடர்ந்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதேபோல பிரசன்னா குறித்து பேசிய ஸ்நேகா, திருமணத்திற்கு பிறகு தான் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும் பிரசன்னாதான் தன்னை மோட்டிவேட் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சமூகவலைதளங்களில் பிசி
தொடர்ந்து சமூகவலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் ஸ்நேகா தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இளம் நாயகிகளுக்கே போட்டியாக இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன.

திருப்பதியில் சாமி தரிசனம்
இந்நிலையில் இன்றைய தினம் ஸ்நேகா, பிரசன்னா குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து திருப்பதி வளாகத்தில் சில ரசிகர்கள் ஸ்நேகாவுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.

ரசிகர்களுடன் செல்ஃபி
அவர்கள் அனைவருடனும் சிறப்பாக சிரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஸ்நேகா. அவருடைய இந்த எளிமையான அணுகுமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் இதேபோல பழனியின் சினேகா -பிரசன்னா சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











