Chandramukhi - சந்திரமுகி படத்தில் ஃபர்ஸ்ட் ஜோதிகா இல்லை.. அந்த நடிகை நடிச்சிருந்தாலும் செமயா இருந்திருக்குமே

சென்னை: Chandramukhi (சந்திரமுகி) சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் சினேகாதான் முதலில் நடிக்கவிருந்தாராம்.

ஃபாசில் இயக்கத்தில் வெளியான மணிசித்திரதாழு படத்தை பி.வாசு முதலில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். அங்கு மெகா ஹிட்டடித்தது. இந்த சூழலில் பாபா படத்தில் படுதோல்வியை ரஜினி சந்தித்ததால் நல்ல கதைக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தார். அப்படி அவரிடம் சென்ற கதைதான் சந்திரமுகி. கன்னடத்திலிருந்து கொஞ்சம் மாற்றி தமிழுக்கேற்ப வாசு கதையை ரெடி செய்தார்.

Sneha is the First Choice to Act in Chandramukhi Movie at Jothika Character

மெகா ஹிட்: ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு, பிரபு, நயன்தாரா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்தது. வடிவேலுவின் காமெடி, ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு, அருமையான திரைக்கதை, அட்டகாசமான க்ளைமேக்ஸ், ரஜினியின் மாஸ், க்ளாஸ் என அனைத்தும் கலந்து படம் மெகா ஹிட்டடித்தது. மொத்தம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது.

சந்திரமுகி 2: இந்த சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. லாரன்ஸ், கங்கனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்தது. முக்கியமாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தை பார்க்கவே சகிக்கவில்லை என்று கூறி சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

சினேகா: சந்திரமுகி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற முக்கிய பங்குகளில் ஒருவர் ஜோதிகா. தனது அசாத்திய நடிப்பால் படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றார். இந்நிலையில் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இதுகுறித்து சினேகா அளித்த ஒரு பேட்டியில், "நிறைய நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது.

Sneha is the First Choice to Act in Chandramukhi Movie at Jothika Character

சந்திரமுகி: சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா நடித்த கங்கா கேரக்டரில் நடிக்க என வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்தக் கதாபாத்திரத்தில் ஜோதிகா ரொம்பவே சிறப்பாக நடித்திருந்தார். நான் அந்த கேரக்டரில் நடித்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும் அவ்வளவுதான். இது மிஸ் ஆகிவிட்டதே என்று எப்போதும் நான் ஃபீல் பண்ணவேமாட்டேன்.

அதெல்லாம் நடக்கும்தான்: நான் அட்டெண்ட் செய்ய வேண்டிய ஒரு நிகழ்ச்சி திடீரென கேன்சல் ஆவது ஆகட்டும், ஒரு படத்தில் ஒப்பந்தமாகி கையெழுத்திட வேண்டிய நேரத்தில் அது கடைசி நேரத்தில் நடக்காமல் போவது ஆகட்டும் இதெல்லாம் அப்பப்போ நடக்ககூடியவைதான். அதுகுறித்தெல்லாம் நான் ரொம்பவே யோசிக்கமாட்டேன். சரி பரவாயில்லை அடுத்தது என்ன என்று அதை நோக்கி போய்விடுவேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X