புன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் !

Recommended Video

Sneha Blessed with Girl Baby | Prasanna | Aranthagi Nisha

சென்னை : புன்னகை அரசி சினேகாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார்.

புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சினேகா. மலையாள திரைப்பட உலகில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

 Sneha, prasanna blessed with girl baby

தமிழில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இதன் பின் வரிசையாக படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் பெற்றார் சினேகா.

 Sneha, prasanna blessed with girl baby

இவரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய படம் உன்னை நினைத்து. பின் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. இதற்கு அடுத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தனுஷ் உடன் புதுப்பேட்டை, சிம்பு உடன் சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

 Sneha, prasanna blessed with girl baby

இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 Sneha, prasanna blessed with girl baby

தற்போது சினேகாவுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது பிரசன்னா துப்பறிவாளன் இரண்டாவது பாகம் மற்றும் மாப்பியா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X