அடுத்த வருஷம் நிச்சயம் ஸ்வீட் நியூஸ்… சினேகா – பிரசன்னா
விளம்பரங்களில் சினேகா - பிரசன்னா ஜோடிதான் ஹாட். ஜவுளிக்கடையோ, ரியல் எஸ்டேட் விளம்பரமோ, நகைக்கடையோ எதுவென்றாலும் கூப்பிடு சினேகா பிரசன்னா ஜோடியை என்று கூறும் அளவிற்கு பிரபல ஜோடிகள் ஆகிவிட்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் விளம்பரத்தில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்த இந்த தம்பதி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய உள்ளனர்.
சினிமா, விளம்பரங்களில் கமிட்மெண்ட்கள் முடித்துவிட்டு அடுத்த வருஷம் நிச்சயம் ஸ்வீட் நியூஸ் சொல்வோம் என்கின்றனர் இந்த ஜோடி

காதல் மலர்ந்த தருணம்
சினேகா - பிரசன்னா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

விளம்பர சூப்பர் ஹிட் ஜோடி
சாம்பார் பொடி விளம்பரத்தில் இந்த ஜோடி புதுமணத்தம்பதிகளாக நடித்தனர் அந்த விளம்பரம் சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து பிரபல நகைக்கடை, ரியல் எஸ்டேட் என ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.

பாசிட்டிவ் விசயங்கள்
சினேகாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நிறைய பாசிட்டிவ் விசயங்கள் நடந்துள்ளது என்று பிரசன்னாவே கூறியுள்ளார்.

தனிக்குடித்தனம் சூப்பர்
தனிக்குடித்தனம் நடத்துவது காற்றில் மிதப்பது மாதிரி இருக்கிறதாம் இந்த தம்பதிக்கு. இது ஒரு சுகமான சுமை என்கிறார் பிரசன்னா.

சினிமா ஜோடி சேர ஆசை
என்னதான் விளம்பரத்தில் ஜோடியாக நடித்தாலும் இருவரும் மீண்டும் சினிமாவில் ஜோடியாக நடிக்க கதை கேட்டு வந்தார்கள். இப்போதுதான் அது கை கூடி வந்துள்ளதாம்.

அச்சமுண்டு இயக்குநர்
‘அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கிய டைரக்டர் வைத்தியநாதன் சொன்ன கதை பிடித்துப்போய், தற்போது அவர் இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

செல்லச்சண்டை உண்டு
சூப்பர் லவ் ஜோடி என்றாலும் அடிக்கடி முட்டல், மோதல், உரசல் என எழுவது உண்டாம். ஊடல்தானே வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்கிறார் பிரசன்னா.

சூப்பரா சமையல்காரர்
பிரசன்னா சூப்பராக சமைப்பாராம், பாஸ்தா, சான்ட்விச் செய்தாலும் தமிழ்நாட்டு சமையலை சீக்கிரம் கற்றுக் கொள்வேன் என்கிறார்.

ஸ்வீட் நியூஸ் எப்போ
சினிமா, விளம்பரம் என ஜோடியாக நடித்தாலும் அனைவரும் எதிர்பார்க்கும் விசயம் குழந்தை எப்போ என்பதுதான். அதுபற்றி பதில் கூறியுள்ள பிரசன்னா, இருவருக்குமே படங்கள் இருக்கிறது. அதை முடித்துவிட்டு கண்டிப்பாக அடுத்த வருசம் ஸ்வீட் நியூஸ் சொல்வோம் என்கிறார்.


Click it and Unblock the Notifications











