டோனாவூர் ராதா... ஜோடியாக நடிக்கும் சினேகா- பிரசன்னா தம்பதி!
சென்னை: டோனாவூர் ராதா என்ற படத்துக்காக சினேகாவும் பிரசன்னாவும் ஜோடி சேர்கிறார்கள்.
காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதியான பிரசன்னாவும் சினேகாவும் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதைத் தொடர்கின்றனர்.

புது பட நிறுவனம்
சமீபத்தில் இருவரும் சேர்ந்து, புதிதாக கேம் சேஞ்சர் என்டர்டெயிண்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர்.

லட்சுமி ராமு
இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு பாண்டிராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய லட்சுமிராமு என்பவருக்கு கிடைத்திருக்கிறது.

டோனாவூர் ராதா
இந்தப் படத்திற்கு ‘டோனாவூர் ராதா' என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் சிநேகாவும், பிரசன்னாவும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.

தயாரிப்பு
அதைத்தொடர்ந்து இவர்களை நிஜத்திலும் ஜோடி சேர்த்தவரான ‘அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குநர் அருண்வைதியநாதன் இயக்கும் ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் பிரசன்னா நடிக்கிறார். சினேகா இல்லை. பிற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இந்நிறுவனம் மூலம் பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இருவரும் முடிவு செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











