Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
செல்ல மகளின் கொள்ளை அழகு ஸ்டில்.. முதன்முறையாக வெளியிட்டார் நடிகை சினேகா.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை சினேகா தனது செல்ல மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பிரபல நடிகை சினேகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர், அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
ராமராக நடிக்கும் ஆதிபுருஷ் படத்துக்காக.. வில்வித்தைப் பயிற்சி பெறுகிறார் பிரபல நடிகர் பிரபாஸ்!

பிரசன்னாவுடன் திருமணம்
அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விஹான் என பெயரிட்டனர். இந்நிலையில் நடிகை சினேகா இரண்டாவது முறையாகக் கர்ப்பம் ஆனார்.

பெண் குழந்தை
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அவருக்கு அழகானப் பெண் குழந்தை பிறந்தது. அப்போது தை மகள் வந்தாள் என்று தனக்கு மகள் பிறந்ததை நடிகர் பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதைக் கண்ட ரசிகர்கள் தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின்னர் இந்த குழந்தைக்கு ஆதியந்தா என்று பெயரிட்டனர்.

செல்ல மகள் போட்டோ
இதுவரை தன்னுடைய மகள் புகைப்படத்தை மறைத்தபடியே காட்டி வந்த சினேகா, முதல் முறையாக செல்லமகளின் போட்டோ ஷூட் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் பிரசன்னாவுக்கு நேற்று பிறந்த நாள். சமூக வலைதளங்களில் பிரபலங்கள், அவருக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முதன்முறையாக
தன் காதல் கணவர் பிறந்த நாளில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை சினேகா, 'இந்த இனிய குழந்தைகளுடன் என் வாழ்க்கையை அழகாக மாற்றி அமைத்ததற்கு நன்றி, லவ் யூ ஸோ மச் என்று கூறியுள்ளார். பின்னர் தனது செல்லமகள் ஆதியந்தாவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ள சினேகா, குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாழ்வை அழகாக்கியது
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் பிரசன்னா, நன்றி கண்ணம்மா, வாழ்நாள் முழுவதும் நாம் விவாதித்துக் கொண்டே இருக்க முடியும், யார் யாருடைய வாழ்க்கையை அழகாக்கியது என்று. நான், என் வாழ்க்கையை நீங்கள் அழகாக மாற்றினீர்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொள்ளை அழகு
நடிகர் சாந்தனு, குழந்தை மிகவும் அழகு என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் குழந்தைக்கும் நடிகை சினேகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆதியந்தா கொள்ளை அழகு ரசிகர்களும் கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்களை லட்சக் கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர். இவை, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.