என்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended Video

சென்னை: சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகன் விஹான் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த சினேகா வேலைக்காரன் படம் மூலம் மீண்டும் தமிழில் ஃபுல் டைம் நடிகையானார். வேலைக்காரன் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதில் அவருக்கு வருத்தம் என்று செய்திகள் வெளியாகின.
தற்போது அவர் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தலைமுடி
சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது. அவர் தனது தலைமுடியை நறுக்கியுள்ளார். ஹோம்லியான சினேகா இந்த அளவுக்கு குட்டியாக முடி வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அட்டைப்படம்
ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் சினேகா குட்டி முடியுடன் வந்துள்ளார். அந்த புகைப்படத்தில் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் மற்ற புகைப்படங்களில் சினேகா ஏன் இப்படி செய்தார் என்பது போன்று உள்ளது.

அவர் இஷ்டம்
நீண்ட தலைமுடி வைத்திருக்கும் நடிகைகள் ஹேர்கட் செய்து வருவது ஃபேஷனாகிவிட்டது. சமந்தா கூட அண்மையில் தனது தலைமுடியை நறுக்கிவிட்டார். இந்நிலையில் சினேகாவும் முடியை வெட்டியுள்ளார்.

ஹோம்லி
ஹேர்கட் நல்லாத் தான் இருக்கு, ஆனால் நம்ம ஹோம்லி சினேகாவுக்கு நீளமான முடி தான் அழகு என்கிறார்கள் ரசிகர்கள். சரி விடுங்கப்பா முடியை வெட்டிட்டாங்க, என்ன செய்ய?


Click it and Unblock the Notifications











