டிராகன் படத்துல யாரெல்லாம் கேமியோ தெரியுமா?.. அந்த நடிகை தான் வேணும்னு பிரதீப் அடம்பிடித்தாரா?

சென்னை: கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படம் தோல்வியை தழுவியது. அதே போல இந்த ஆண்டு அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி ரிலீஸாக வெளியான நிலையில், பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை. பிப்ரவரி மாதம் படங்கள் வெளியானாலே இதுதான் நிலைமை என கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வரும் நிலையில், அதை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் உடைத்துள்ளதாக ரசிகர்களே இந்த படத்தை பிளாக்பஸ்டர் என அறிவித்து வருகின்றனர்.

கல்கி 2898 ஏடி படத்தில் ராஜமெளலி, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் என ஒவ்வொரு கேமியோ ரோல் வரும்போதும் ரசிகர்கள் எந்தளவுக்கு ஆச்சர்யமடைந்தார்களோ அதே போல டிராகன் படத்திலும் கேமியோ ரோல்களை சரியாக பிளேஸ் செய்து அஷ்வத் மாரிமுத்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

Ivana Dragon Sneha

படத்தின் டிரெய்லரிலேயே சினேகா மற்றும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கேமியோக்களாக வருவதை ரிவீல் செய்த நிலையில், மேலும், சில பிரபலங்களை ரிவீல் செய்யாமல் கடைசி வரை காப்பாற்றியது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது.

சினேகா சீன்: காதலி அனுபமா பரமேஸ்வரன் பிரேக்கப் செய்துவிட்டு போக துக்கத்தில் பைக் ஓட்டிக் கொண்டு செல்லும் பிரதீப் ரங்கநாதன் கீழே விழுந்து கை அடிபட்டு விட அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக சினேகா சிறப்பான கேமியோ ரோலில் வந்து ரசிகர்களை ஆரம்பத்திலேயே ஹேப்பியாக்கி விடுகிறார். படத்தின் கதைக்கு தேவையான வசனங்களை அவர் மூலமாக இயக்குநர் கடத்தியதும் இளைஞர்களுக்கு பாடம் நடத்தியதும் பக்கா.

Ivana Dragon Sneha

அஷ்வத் மாரிமுத்து: படித்தெல்லாம் முன்னேற வேண்டாம். ஃபெயிலா போனால் கூட ஃபேக் டிகிரி வைத்து வேலைக்கு சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என்பதை ஹீரோவுக்கும் சொல்லித்தரும் நபராக அஷ்வத் மாரிமுத்துவே நடித்திருந்த கேமியோவும் அதற்காக அவர் அனுபவிக்கும் பிரச்சனையும் ரசிகர்களை ரொம்பவே கனெக்ட் செய்கிறது. கேமியோ என்றால் பேருக்கு வந்து செல்பவர்களாக இல்லாமல் கதையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஸ்க்ரிப்ட் வொர்க் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. விஜய் சேதுபதியை ஒரு நாள் மட்டுமே ஓ மை கடவுளே படத்தில் நடிக்க வைத்து படம் முழுக்க அவர் வருவது போன்ற உணர்வை கடத்தியவர் தான் அஷ்வத் மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Ivana Dragon Sneha

ரவீந்தர் சந்திரசேகர்: பிக் பாஸ் பிரபலமும் விஜே மகலாட்சுமியின் வீட்டுக்காரருமான ரவீந்தர் சந்திரசேகர் இந்த படத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறார். ஆனால், அவரை ஒரு கேமியோவாகவே ரசிகர்கள் பார்த்ததும் இந்த ரோலுக்கு இவரை இயக்குநர் தேர்வு செய்தது செம பொருத்தமாக உள்ளது என தியேட்டரிலேயே பேச ஆரம்பித்துவிடுகின்றனர். போலியாக சர்டிபிகேட் அடித்துக் கொடுத்தும் எக்ஸாம் பேப்பரை சேஸ் செய்ய வைத்து பாஸ் செய்ய வைக்கும் ஃபிராடுத்தனத்தை செய்யும் நபராக அவர் நடித்துள்ளார்.

Ivana Dragon Sneha

சாண்டி மாஸ்டர்: லவ் டுடே படத்தில் "பச்சை இலை" பாடல் போல டிராகன் படத்தில் "மாட்டிக்கினாரு ஒருத்தர்" பாடல் வரும்போதே இந்த பாட்டுக்கு சாண்டி மாஸ்டர் தான் கொரியோகிராஃபி செய்திருப்பார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அந்த பாடலில் திடீரென கேமியோவாக அவரும் வந்து டான்ஸ் போடுவது வேற ரகம்.

லவ் டுடே இவானா: ஏற்கனவே படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இடுப்பைக் காட்டியும் கயாடு லோஹர் நீச்சல் உடையில் ஒட்டுமொத்த கவர்ச்சியை காட்டியும் இரண்டு ஹீரோயின்கள் பண்ண இம்சை போதாது என கடைசியாக மத கஜ ராஜா படத்தில் சதா வருவது போல லவ் டுடே இவானாவின் கேமியோ தியேட்டரை பிளாஸ்ட் செய்கிறது. கீர்த்தி ஷெட்டி தான் வருவாரா என ரசிகர்கள் நினைக்க லவ் டுடே இவானாவை நடிக்க வைக்கலாம் என்கிற ஐடியாவை கொடுத்ததே அர்ச்சனா கல்பாத்தி தானாம். பிரதீப் ரங்கநாதனுக்கும் இவானா கேமியோவுக்கும் சம்மந்தமில்லை என அஷ்வத் மாரிமுத்துவே பிரஸ் மீட்டில் சொல்லிவிட்டார். சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்கள் கேமியோவாக நடிக்கவில்லை.

Ivana Dragon Sneha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X