சிம்பு பட நடிகையின் பிறை நிலா டாட்டூ.. அந்த இடம் ரொம்ப வலிக்குமாமே.. வைரலாகும் வீடியோ!

By

சென்னை: பிரபல நடிகை, பிறை நிலா மோதிரத்தை டாட்டூவாக வரைந்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை சினேகா உல்லால்.

பின்னர் மனோஜ் மஞ்சுவின், என்னைத் தெரியுமா? படம் மூலமும் தமிழுக்கு வந்தார்.

பேஸுபான் இஷ்க்

பேஸுபான் இஷ்க்

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள சினேகா, இந்தியிலும் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக நடிக்கவில்லை. கடைசியாக, ஜஸ்வந்த் கங்கானி இயக்கிய பேஸுபான் இஷ்க் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. பெரிதாகக் கவனிக்கப்படவில்லை

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

இந்நிலையில் ஐந்து வருடத்துக்குப் பிறகு எக்ஸ்பரி டேட் என்ற வெப் சீரிஸில் நடித்தார். இது ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் அவர் டோனி லுயக்கின் மனைவியாக, திஷா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராயை போலவே தோற்றம் கொண்ட இவரை நடிகர் சல்மான் கான், சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அதற்கான காரணம்

அதற்கான காரணம்

லக்கி என்ற படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இந்தியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த சினேகா உல்லால் அதற்கான காரணத்தைக் கூறியிருந்தார்.

சோர்வாகி விடுவேன்

சோர்வாகி விடுவேன்

'எனது உடல்நிலை பிரச்னை காரணமாக படங்களில் நடிக்கவில்லை. 30 நிமிடம் தொடர்ந்து நின்று வேலை செய்ய முடியாது. உடனே சோர்வாகி விடுவேன். அதனால் நடனம், நடிப்பு என்று பல மணிநேரம் பணியாற்றுவது முடியாத காரியம். அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

பிறைநிலா மோதிரம்

கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் சினேகா. மற்ற நடிகைகளை போல அடிக்கடி தனது ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். அவர் இப்போது தனது விரலில் பிறைநிலா மோதிரம் போன்ற டாட்டூவை வரையும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எலும்பில்லா சதை

எலும்பில்லா சதை

அதில் அவர் கூறியிருப்பதாவது: என் விரலில் வரையப்படும் பிறை நிலா மோதிர டாட்டூவை பாருங்கள். விரலில் பச்சைக் குத்துவது அதிக வலியை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அது எலும்பு இல்லாத சதை. இருந்தாலும் அதை விரும்புகிறேன். இன்னொரு டாட்டூவும் குத்திக் கொள்ள இருக்கிறேன், எங்க பண்ணலாம், ஐடியா இருக்கா? என்று கேட்டுள்ளார்.

ராஜாளி பறவை

ராஜாளி பறவை

இதையடுத்து ரசிர்கள் பலர், இன்னொரு விரலில், நட்சத்திரத்தை டாட்டூவாக வரையுங்கள் என கூறியுள்ளனர். சிலர் ராஜாளி பறவையை கழுத்துல அல்லது இடுப்புல குத்திக்கோங்க, அழகா இருக்கும் என ஐடியா கொடுத்துள்ளனர். ஒருவர் கேள்விக்கு பதிலளித்துள்ள சினேகா, இடுப்பில் டாட்டூ குத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X