»   »  நாக்ரவி மீது ஸ்னேகா மானநஷ்ட வழக்கு நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா

நாக்ரவி மீது ஸ்னேகா மானநஷ்ட வழக்கு நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா
நடிகை ஸ்னேகா குறித்துப் பேட்டி அளிக்கவோ, தகவல்களை வெளியிடவோ கூடாது என்று ஸ்னேகாவின் மாஜி நண்பர் நாக்ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாக் ரவியை ஸ்னேகா காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் கட்டிப்புடி போசில் இருக்கும் படங்களும், ஸ்னேகாவின்குடும்பத்தினருடன் நாக்ரவி நெருக்கமாக கொஞ்சி மகிழும் படங்களும் வெளியாயின.

இந் நிலையில் நாக் ரவியை யாரென்றே தெரியாது என போடு போட்டார் ஸ்னேகா. பின்னர் நாக் ரவித் தெரியும் என்றும் அவர்தனது காதலர் எல்லாம் இல்லை என்றும் கூறினார்.

ஸனேகாவின் சகோதரியுடன் நாக்ரவி
ஆனால், நாக் ரவியோ தன்னை ஸ்னேகாவும் அவரது குடும்பத்தினரும் ஏமாற்றிவிட்டதாகவும் பல லட்சத்தை தான் இவர்களிடம்இழந்துவிட்டதாகவும் கூறினார். அத்தோடு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றார்.

இருவருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். குற்றச்சாட்டுக்களின் உச்சமாக நாக் ரவி தன்னிடம் சூட்டிங்ஸ்பாட்டில் வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டு சலசலப்பைஏற்படுத்தினார் ஸ்னேகா.

இந் நிலையில் நாக் ரவி மீது நஷ்ட ஈடு கோரி ஸ்னேகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவில், மலேசியாவுக்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்தபோது, நாக் ரவி குடும்ப நண்பராக அறிமுகமானார். பின்னர் நான்பெங்களூரில் தங்கியிருந்தபோது என்னிடம் நாக்ரவி தவறாக நடக்க முயற்சித்தார். என்னைப் பற்றி பத்திரிகைகளுக்கு தவறானதகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் நான் மன உளைச்சல் அடைந்தேன், வேதனை அடைந்துள்ளேன். எனவே நாக் ரவி எனக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும்.

நாக்ரவிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டும் ஸ்னேகாவின் தந்தை. உடன் ஸ்னேகா
என்னைப் பற்றி பேட்டி கொடுக்கவோ, கருத்துக் கூறவோ தடை விதிக்க வண்டும் என்று கூறியுள்ளார் ஸ்னேகா.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், நாக்ரவி ஸ்னேகா குறித்து எந்தவிதமான பேட்டியையோ, கருத்தையோவெளியிடக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil