அழகான ட்வின்ஸை பெற்றெடுத்த மனைவிக்கு சூப்பர் பரிசு கொடுத்த சினேகன்... வெளியான வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவில் புத்தம் புது பூவே படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார் சினேகன். அண்மையில் சினேகன் - கனிகா தம்பதிக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில், சினேகன் தனது மனைவிக்கு கிஃப்ட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடலாசிரியர் சினேகன் நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டுள்ளார் . இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசனுடன் இணைந்து அரசியலில் பயணித்து வருகிறார். கமலின் மனதுக்கு பிடித்த நணபர்களில் ஒருவராகவும் உள்ளார். தற்போது சீரியலில் நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழ் மீது அதீத பற்று கொண்ட நபராகவும் திகழ்கிறார்.

கட்டிப்பிடி வைத்தியம்: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சினேகன் கட்டிப்பிடி வைத்தியத்தின் மூலம் பெரிதளவில் பேசப்பட்டார். சமூக சிந்தனை கொண்ட நபராகவும் இருந்த சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு வரவேற்பு கிடைத்தன. கவிப்பேரரசு வைரமுத்து மீதுள்ள பேரன்பை பல நிகழ்ச்சிகளில் அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் பாட்டு எழுதுவதற்கு முக்கிய காரணியாக இருந்தவரும் அவர்தான் என தெரிவித்தார்.

காதல் திருமணம்: சின்னத்திரை நடிகையான கனிகாவும் சினேகனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பின்னர், 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 7 ஆண்டுகளாக காதலித்து வந்தபோதும் அதை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக பாதுகாத்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு கனிகாவும் சினேகனும் அடிக்கடி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். அனைவரையும் கவர்ந்த காதல் ஜோடியாகவும் வலம் வந்தனர்.

அழகான இரட்டை குழந்தை: கனிகா - சினேகன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சி செய்தியை இன்ஸ்டா மூலம் சினேகன் பகிர்ந்தார். பின்னர், சினேகன் - கனிகா தம்பதிக்கு வாழ்த்து மழைகள் குவிந்தன. திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு பெயர் வைத்த கமல்: குழந்தைகள் பிறந்த கையோடு இரண்டு குழந்தைகளுடன் கமல்ஹாசனை நேரில் பார்த்து சினேகன் -கனிகா வாழ்த்து பெற்றனர். இந்த அழகான 2 பெண் குழந்தைகளுக்கும் கமல்ஹாசன் பெயர் சூட்டினார். குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து காதல், கவிதை என அழகான தமிழ் பெயர்களை வைத்தார். காதலர் தினத்தை தேர்வு செய்து அந்த நாளில் தனது குழந்தைகளுக்கு காதல், கவிதை பெயர்வைத்துள்ளதாக சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு அன்பு பரிசு: இரட்டை குழந்தைகளுடன் கொஞ்சி குழாவும் சினேகன்- கனிகா தம்பதிக்கு ஒரு பக்கம் வாழ்த்து மடல்கள் குவிகிறது. இந்நிலையில், கனிகா அசந்து போகும் வகையில் ஐ போனை பரிசாக அளித்துள்ளார். ஐ போனை பிரித்து பார்த்த கனிகா சினேகனை கட்டியணைத்து முத்தமிடுகிறார். சினேகன் கனிகாவிடம் போன் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர் கிஃப்ட் பரிசு அளித்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











