இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற சினேகன் – கனிகா தம்பதி

சென்னை : 1997 ம் ஆண்டு புத்தம் புது பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடிகர் என பிரபலமானவர் சினேகன்.

நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி உள்ள சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, முக்கிய பொறுப்பு வகித்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

காதலை வெளியிட்ட சினேகன்

காதலை வெளியிட்ட சினேகன்

டைரக்டர் அமீர் இயக்கிய யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில் சின்னத்திரை நடிகை கனிகா உடனான தனது பல ஆண்டு கால காதலை வெளியிட்டார் சினேகன். அதைத் தொடர்ந்து ஜுலை 29 ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தார் சினேகன்.

கமல் தலைமையில் திருமணம்

கமல் தலைமையில் திருமணம்

கொரோனா காலம் என்பதால் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கமல் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே புதுமனைவியுடன் தற்போது நடித்து வரும் பட ஷுட்டிங்கிற்கு கிளம்பி சென்றார் சினேகன்.

மனைவி பெயரில் டாட்டூ

மனைவி பெயரில் டாட்டூ

தனது காதல் மனைவியுடனான ஃபோட்டோக்கள், புது படங்கள் பற்றிய தகவல்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் சினேகன். சமீபத்தில் தனது மனைவி கனிகாவின் பெயரை கையில் டாட்டூவாக வரைந்து கொண்டார் சினேகன். இந்த வீடியோ செம வைரலானது.

இசைஞானியிடம் ஆசி

இசைஞானியிடம் ஆசி

இந்நிலையில் சினேகனும், கனிகாவும் இன்று இசைஞானி இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, ஆசிர்வாதம் வாங்கி உள்ளனர். இளையராஜா, சினேகனுக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்துள்ளார். இந்த ஃபோட்டோக்களை சினேகனும், கனிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

நேரில் அழைத்த இளையராஜா

நேரில் அழைத்த இளையராஜா

அதோடு, எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் எங்களை நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து தன் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள் என இருவரும் கேப்ஷன் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலர், உங்கள் வாழ்க்கையின் அற்புதமான தருணம். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X