2 லட்டு குட்டியும் பாட்டிக்கிட்ட வாங்க... சினேகன் கன்னிகா குழந்தைகளை கொஞ்சிய நளினி!
சென்னை: பாடலாசிரியர் சினேகன், கன்னிகா ஜோடிக்கு ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இரட்டை பெண் குழந்தைக்கு பெற்றோராகி இருக்கும் இவர்களை நடிகை நளினி சந்தித்து குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடினார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாடலாசிரியரான சினேகன் 'புத்தம் புது பூவே' என்ற படத்தில் பாடலை எழுதினார். அதன் பிறகு பல படத்திற்கு பாடலை எழுதிய சினேகன், 2001ஆம் ஆண்டு வெளியான 'பாண்டவர் பூமி' படத்தில் எழுதிய பாடல் அவர் பிரபலமாக்கியது. பல ஹிட் பாடல்களை எழுதி திரைக்கு பின்னால் இருந்த சினேகன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

சினேகன்: அதன் பின் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதிலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தனது மனைவி கன்னிகாவுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
காதல் திருமணம்: கடந்த 2021ஆம் ஆண்டு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீரியல் நடிகையான கன்னிகாவும் சினேகனும் 7 ஆண்டுகளாக காதலித்த போதும் அது யாருக்கும் தெரியாத நிலையில், திடீரென காதலை அறிவித்து கமல் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன போதும், குழந்தை இல்லை என கேட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இரட்டை குழந்தைக்கு காதல், கவிதை என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளனர்.
பாட்டிக்கிட்ட வாங்க: குழந்தைகள் அவ்வப்போது செய்யும் சேட்டைகளை சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் தனது மகளுக்கு முதல் உணவு கொடுத்ததை அவர் பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகை நளினி, சினேகனின் குழந்தைகளை வீட்டிற்கு சென்று பார்த்து கொஞ்சி மகிழ்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சினேகன், கன்னிகா இருவருமே நளினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர். அந்த வீடியோவை சினேகன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த இணையவாசிகள், லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











