சினேகன்-கன்னிகா முதல் திருமண நாள்..கேக் வெட்டி வேறலெவல் கொண்டாட்டம்!
சென்னை : சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் தங்களது முதலாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
திரைத்துறையில் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா ரவிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் காதலித்த விஷயம் சமூகவலைதளத்தில் தெரியும் போது முதலில் பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சினேகன்-கன்னிகா
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித் திரையாக இருந்தாலும் சரி அங்கே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது காலங்காலமாக நடந்து கொண்டு வந்தாலும், பல திருமணங்கள் வாழ்க்கையில் துவக்கத்திலேயே காணாமல் போய்விடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதியில் முறித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய காதலை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கும் அவர்கள் மீது தனி மரியாதை வந்து விடுகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக கன்னிகா சினேகன் ஜோடி இருந்து வருகின்றனர்.

திருமணம்
கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுடைய துறையில் தாங்கள் சாதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக தங்களுக்குள் இருக்கும் காதலை வெளியுலகத்திற்கு காட்டிக்கொள்ளாமல் மறைத்து வந்தனர். பல வருட காத்திருப்புக்கு பிறகு கமல்ஹாசன் தலைமையில் இவர்களுடைய திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

இணையத்தில் ஆக்டிவ்
திருமணத்திற்குப் பிறகு இவர்கள் போட்டோஷூட், வீடியோ என இருவரும் பிஸியாகவே இருக்கிறார்கள் குறிப்பாக, கன்னிகா இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார். பெரிய வயது வித்தியாசம் கொண்ட தம்பதியாக இருந்தாலும், இவருக்கு இடையில் இருக்கும் அன்பையும், புரிதலையும் பல இடங்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்நிலையில், பாடலாசியர் சினேகன் கன்னிகா ரவி தம்பதியினர் தங்களது முதல் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த வீடியோவை கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் பல குவிந்து வரும் நிலையில், பலரும் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











