குழந்தைங்கள கொஞ்சுறாங்கனு பார்த்தா.. விளம்பரம் பண்றாங்களே.. சினேகன், கன்னிகா தம்பதியின் வீடியோ!

சென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான சினேகன் சமீபத்தில் தான் தனது குழந்தைகளின் முகத்தை உலகத்துக்கு காட்டுகிறேன் என போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால், அதற்குள் தற்போது, குழந்தைகளை வைத்து விளம்பரமே செய்து வருவதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆவதே இன்ஃப்ளூயன்சர்களாக மாறி பணம் சம்பாதிக்கத்தான் என பலரும் ரீல்ஸ் போட்டு பைசா பார்த்து வருகின்றனர்.

பிரபலங்கள் ஆகிவிட்டால், சில விளம்பர நிறுவனங்கள் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பொருட்களை வியாபாரம் செய்ய வைக்க விளம்பரங்களை செய்யத் தூண்டுகின்றன. ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, யாஷிகா ஆனந்த் என பல இளம் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வரும் நிலையில், அந்த வரிசையில் பாடலாசிரியர் சினேகன் தனது மனைவி கன்னிகா மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து டயாப்பர் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பரம் செய்துள்ளார்.

Snehan and Kannika Ravi done diaper advertisement with their kids
Photo Credit:

பாடலாசிரியர் சினேகன்: 1997ம் ஆண்டு வெளியான புத்தம் புது பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சினேகன், பாண்டவர் பூமி படத்தில் எழுதிய "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்", "தோழா தோழா தோள் கொடு தோழா" பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தொடர்ந்து பல படங்களுக்கு பாட்லகளை எழுதும் வாய்ப்புகளை பெற்றார். மெளனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சாமி, ஆட்டோகிராஃப், மன்மதன், பருத்திவீரன், சூரரைப் போற்று, பத்து தல என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

சினேகன் திருமணம்: சினிமா பாடலாசிரியராகவும் சில படங்களில் நடித்தும் உள்ள சினேகன் அரசியலிலும் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டார். கடந்த 2021ம் ஆண்டு கன்னிகா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சினேகனுக்கு இந்த ஆண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. தனக்குப் பிறந்த குழந்தைகளை கமல்ஹாசனிடம் காண்பித்து அவரையே பெயரையும் வைக்கச் சொன்னார்.

காதல், கவிதை: கமல்ஹாசன் தனக்கு மிகவும் பிடித்தமான சினேகனுக்கு பிறந்த மகள்களுக்கு காதல், கவிதை என கவித்துவமான பெயர்களை வைத்துவிட்டார். காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் என சமீபத்தில், தங்களது இரு மகள்களின் முகங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் சினேகன். இந்நிலையில், அதற்குள் குழந்தைகளை விளம்பரப் படத்தில் நடிக்க வைத்து விட்டார்.

டயாப்பர் விளம்பரம்: சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு கொஞ்சும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆனால், டயாப்பர் நிறுவனம் ஒன்றுக்கான விளம்பரமாக அந்த வீடியோவை அவர்கள் வெளியிட்ட நிலையில், இப்பவே குழந்தைகளையும் நடிக்க வைக்க ஆரம்பித்து விட்டீர்களா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X