லட்டு மாதிரி இரண்டு குழந்தைகள்... சினேகன் - கன்னிகாவின் குட்டி பாப்பாவை பாருங்க!

சென்னை: பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளுக்கு ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளுக்கு கமல்ஹாசன், 'காதல்', 'கவிதை' என அழகான தமிழ் பெயர் வைத்து இருந்தார். இதையடுத்து, சினேகன் முதன் முறையாக தனது குழந்தைகளின் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலை போல குவித்து வருகின்றனர்.

பிரபல பாடலாசிரியரான சினேகன் 'பாண்டவர் பூமி' படத்தில் எழுதிய தோழா தோழா பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். இவர் சுமார் 70 திரைப்படங்களுக்கு மேல் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக சினேகன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பலரை, ஆறுதல் படுத்த அன்பாக கட்டிப்பிடித்ததால், இணையத்தில் பலரும் இவரை சினேகனை கட்டிப்பிடி சினேகன் என கிண்டல் செய்தனர். ஆனால், இதற்கு பதில் அளித்திருந்த சினேகன், அது அன்பின் வெளிப்பாடு என்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.

snehan kannika ravi twins

காதல் திருமணம்: இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் சினேகனும் 7 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இவர்கள் பொது இடத்தில் சந்தித்து கொள்ளாததால், இவர்களின் காதல் விஷயம் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக இருந்தது. பின், இருவரும் திருமண பத்திரிக்கை கொடுத்து காதலை அறிவித்தனர். இவர்களுக்கு கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி கொடுத்தார். மனம் கவர்ந்த காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை என கமல்ஹாசன் அழகான தமிழ் பெயர் வைத்தார்.

அழகான சின்ன தேவதை: சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து ஐந்து மாதமாகி உள்ள நிலையில், தனது இரட்டை பெண் குழந்தைகளை முதன் முதலாக மீடியாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். அழகான பாவாடை சட்டையில் இரண்டு குழந்தைகளும் க்யூட்டா உள்ளனர். லட்டு போல இருக்கும் இரட்டை குழந்தைகளை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், சிலர் கண்ணு பட போகுது சுத்திப்போடுங்க சார் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்கைள பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X