சினேகன் - கன்னிகா இரட்டை குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? கவிஞரே அசத்திப்புட்டீங்க!
சென்னை: சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு கடந்த மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இரட்டை பெண் குழந்தைக்கு பெற்றோராகி இருக்கும் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், தற்போது பெண் குழந்தைகளுக்கு சினேகன் கமல்ஹாசன் முன்னிலையில் அழகான தமிழ் பெயர் வைத்துள்ளார்.

பிரபல பாடலாசிரியரான சினேகன் 'பாண்டவர் பூமி' படத்தில் எழுதிய அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். 70 திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கும் சினேகன், தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பல வெற்றிப்பாடல்களை எழுதியது இவர் என பலருக்கு தெரியவந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்,கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். தற்போது சினேகன் சீரியல் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

7 ஆண்டு காதல்: இவர், கடந்த 2021ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் சினேகனும் 7 ஆண்டுகளாக காதலித்த போதும் அது யாருக்கும் தெரியாத நிலையில்,திடீரென காதலை அறிவித்து கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அனைவரும் மனம் கவர்ந்த காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தனர்.

அழகான தமிழ் பெயர்: இதையடுத்து, சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு ஜனவரி 25ந் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை தம்பதிகளாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று கமல்ஹாசன், சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை என அழகான தமிழ் பெயர்களை வைத்து, குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்துள்ளார். காதலர் தினத்தை தேர்வு செய்து அந்த நாளில் தனது குழந்தைகளுக்கு காதல், கவிதை பெயர்வைத்துள்ளதாக சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











