நான் அப்படி பேசியிருக்கக்கூடாது..மேடையில் மன்னிப்பு கேட்ட சினேகன்!
சென்னை : விருமன் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கூட அனுப்பவில்லை என வருத்தப்பட்டு பேசியதற்கு சினேகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

விருமன்
கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா தற்போது விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ், சரண்யா பொண்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைவெளியீட்டுவிழா
விருமன் படத்தின் இசை ஆடியோ வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இந்த விழாவில் அப்படத்தின் டிரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். மேலும், இந்த விழாவில், சூர்யா, கார்த்தி, பாரதி ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அதிதி ஷங்கர்,இயக்குநர் ஷங்கர், மைனா நந்தினி, வடிவுக்கரசி,சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேதனை
இந்த படத்தில், வானம் கிடுகிடுங்க என்ற பாடலை பாடலாசியர் சினேகன் எழுதி இருந்தார். ஆனால், சினேகனுக்கு மதுரையில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கூட வரவில்லை என்றும், கூடிய விரைவில் பாடல் ஆசிரியர் என்ற இனமே இல்லாமல் அழிந்துவிடும் என வேதனையுடன் கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட சினேகன்
இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற விருமன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சினேகன். நான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நான் அப்படி பேசியதற்கு காரணம் பாடலாசியர்களுக்கு மரியாதை குறைந்துகொண்டி வருகிறது. அதை மனதில் வைத்துத்தான் அப்படி பேசினேன் என்றார்.

ஊடகம் இதை பெரிதாக்கிவிடும்
நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கு பல ஹிட் பாடல்களை நான் கொடுத்து இருக்கிறேன். கார்த்தி நடிப்பில் ஹிட்டான பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதினேன் என கூறினார். இந்த விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது ஆனால் நான் இதில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தேன். ஆனால் இந்த விழாவிற்கு நான் வரவில்லை என்றால் ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதாக ஆக்கிவிடுவார்கள் என்பதால் தான் இதில் கலந்து கொண்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











