ஹனிமூன் போகாமல், மனைவியுடன் ஷுட்டிங்கிற்கு பறந்த சினேகன்
சென்னை : பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். பல ஹிட் பாடல்களை எழுதி புகழ்பெற்ற சினேகன், விஜய் டிவி.,யில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
Recommended Video
பிக்பாஸில் இரண்டாம் இடம் பெற்ற சினேகன், அதற்கு பிறகு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் சினேகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.

சினேகனின் 8 ஆண்டு காதல்
இந்நிலையில் ஜுலை 29 ம் தேதி சின்னத்திரை நடிகை கன்னிகா ரவிவை திருமணம் செய்து கொண்டார். கமல் மற்றும் பாரதிராஜா தலைமையில் திருமணம் நடைபெற்றது. கன்னிகாவும், சினேகனும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை திருமண அறிவிப்பின் போது தான் மீடியாக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளனர்.

யார் கன்னிகா ரவி
நடிகை கன்னிகா ரவி, டைரக்டர் திருமுருகன் இயக்கி நடித்த கல்யாண வீடு சீரியலில் ஹீரோயினாக நடித்தார். சன் டிவி.,யில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் என்பதால், அதில் நடித்து பிரபலமடைந்தார் கன்னிகா. இது தவிர கே.பாலச்சந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இது தவிர தாயின் மடியில், சத்திரபதி, அடுத்த சாட்டை, தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்தை விமர்சித்த நெட்டிசன்கள்
சினேகன் - கன்னிகா திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன் டைனமிக் திருமணம் செய்து வைத்த சினேகன், தான் ஏன் அப்படி திருமணம் செய்யவில்லை. இவர் மட்டும் ஏன் தாலி கட்டி திருமணம் செய்தார் என கேள்வி கேட்டும், கடுமையாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

விமானத்தில் பறந்த தம்பதி
ஆனால் அதை கண்டு கொள்ளாமல் திருமணத்திற்கு பிறகு தான் காதலித்த போது முதன் முதலில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர். இந்நிலையில் சினேகன், தான் மனைவியுடன் விமானத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்திருந்தார். அத்துடன் தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

அடுத்த நாளே ஷுட்டிங்
அதில் அவர், திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ என குறிப்பிட்டிருந்தார் சினேகன்.

ஹரி படத்தில் சினேகன்
டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க தான் சினேகன், மனைவியுடன் தூத்துக்குடி சென்றுள்ளாராம். இதை ஃபோட்டோவுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்த சினேகன், கன்னிகா உடனான திருமணம் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை என குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப படத்தில் சினேகன்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்திலும் சினேகன் நடிக்கிறார். குடும்பப் படமான இதில் பெரிய குடும்பத்துடன் இருப்பது போன்ற ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் சேரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications