Snehan -Kannika: காதலாகி கசிந்துருகி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சினேகன்-கன்னிகா!

சென்னை: பாடலாசியிர் சினேகன் தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டிலிருந்து பாடல்கள் எழுதி வருகிறார். 2500 பாடல்களுக்கும் மேல் இவர் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களில் இவர் பணியாற்றி வருகிறார். பாடகராகவும் நடிகராகவும் இவர் செயல்பட்டுள்ளார். இவர் பாண்டவர் பூமி படத்திற்காக எழுதிய அவரவர் வாழ்க்கையில் பாடல் இவரது எழுத்தில் எவர்கிரீனாக ரசிகர்களால் போற்றப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ரன்னர் அப் டைட்டிலை வென்றுள்ளார்.

அரசியலிலும் தன்னுடைய பங்களிப்பை அளித்துவரும் சினேகன், கடந்த 2021ம் ஆண்டில் நடிகை கனிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவர்கள் மிகவும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். பல ரீல்ஸ்களை இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவர்களை ஏராளமானோர் பாலோ செய்து வருகின்றனர்.

Snehan -Kannika shared their new year wishes to fans

சினேகன் -கன்னிகா: பாடலாசிரியர் சினேகன் -கன்னிகா தம்பதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். பல ரீல்ஸ்களை இருவரும் இணைந்து வெளியிட்டு வருகின்றனர். கன்னிகாவை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து தனியாகவும் சினேகனுடன் இணைந்தும் இவர் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் அதிகமான வியூஸ்களை பெற்றுத் தந்து வருகின்றன. சமீபத்தில் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடினார் சினேகன். இந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

புத்தாண்டு கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோயிலுக்கு சென்றுள்ள இந்த ஜோடி, அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. கோயிலில் அமர்ந்தபடி இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இவர்களின் அன்னியோன்யம் வெளிப்பட்டுள்ளது. கன்னிகா வெட்கத்துடன் சினேகன் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்ன அப்படியொரு கவிதையை சொல்லிவிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: கடந்த 2000ம் ஆண்டு முதல் படங்களில் பாடல்கள் எழுதி வருகிறார் சினேகன். விவசாயக் குடும்பத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் பிறந்த இவர், நடிகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகங்களை காட்டி வருகிறார். இவரது கவிதைகளை போலவே கன்னிகாவுடனான இவரது வாழ்க்கையும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. எங்கு சென்றாலும் ஒன்றாகவே போகும் இவர்களது நெருக்கம் ரசிகர்களை அதிகமாக பாராட்ட செய்துள்ளது. அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலமாக ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் கன்னிகா.

மாற்றத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி: புத்தம் புது பூவே என்ற படத்தின்மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், தமிழ்நாடு அரசு விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2500 பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தாலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியே மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய குடும்பத்தை பிரிந்திருந்த சினேகன், இந்த நிகழ்ச்சிக்கு பிறகே அவர்களுடன் இணைந்தார். மேலும் கன்னிகாவையும் திருமணம் செய்தார். இந்த ஜோடி ஆண்டுகள் கடந்த போதிலும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

உற்சாகத்தை கொடுத்த கவிதை: தங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு சுவாரஸ்யங்களையும் இந்த ஜோடி தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக தன்னுடைய மனைவியுடன் விமானத்தில் பறக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சினேகன், நீ மட்டும் பிறக்கவில்லை என்றால்.. நானும் என் காதலும் அனாதையாகவே நின்றிருப்போம் என்று கவிதையால் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். இந்த ஜோடியை போலவே இந்த கவிதையும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து ரசிகர்களுக்கு ஒவ்வொரு பண்டிகை மற்றும் கொண்டாட்டங்களின்போது இவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X