கட்டிப்புடி சினேகன்…. அமைதிக்கு என்ன காரணம்… விளக்கம் கேட்ட ரசிகர்கள் !
சென்னை : திருமணமானதுதான் அமைதிக்கு காரணமா? என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நச்சுனு விளக்கம் அளித்துள்ளார் சினேகன்.
Recommended Video
சினேகன் முதல் சீசனில் கலந்துகொண்டு பலருடைய மனதை கவர்ந்து டைட்டிலை ரன்னராக ஜெயித்தவர்.
சினேகன் கூறிய விளக்கம் ரசிகர்களை வியப்படைய செய்து, இணையத்தில் பல கருத்துக்கள் உலா வருகின்றன.

பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருந்தாலும் இதில் புதுவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்த போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு சீசன்களிலும் ஏற்கனவே பிரச்சனைகளையும், பஞ்சாயத்துகளையும் தொடங்கிய போட்டியாளர்களை பார்த்து பார்த்து இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கியதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.

அமைதிக்கு காரணம் என்ன
இதில், நேற்றைய நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு ரசிகளிடமிருந்து சில கேள்விகள் அனுப்பப்பட்டு இருந்தன. இதற்கு , போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பதில் அளித்தனர். அப்போது, ஒரு ரசிகர், சினேகனிடம் முதல் சீசனில் கலகலப்பாக அனைவர் இடத்திலும் பேசிக்கொண்டு இருந்தீர்கள், ஆனால் இப்போது அமைதியாக இருக்குறீர்கள். திருமணம் ஆகிவிட்டது என்பதால் அமைதியாக இருக்கீங்களா என கேட்டு இருந்தார்.

சில தவறுகளை செய்தேன்
இதற்கு பதிலளித்த சினேகன்,முந்தைய சீசனில் நான் சில தவறுகளை செய்துவிட்டேன். இருந்தாலும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ரன்னரப்பாக வந்தேன். அன்று செய்த தவறை இன்று செய்துவிடக்கூடாது என்பதற்காக அனைவர் பற்றியும் நன்றாக புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன். இனிவரும் காலங்களில் சிறப்பாக விளையாடுவேன் என்று விளக்கம் கொடுத்தார்.

அமைதிக்கு இதுதான் காரணம்
சினேகனின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் சினேகனின் மனைவி இந்த நிகழ்ச்சியை படையப்பா நீலாம்பரிப்போல ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறார் என்றும், இதனால், சினேகன் அமைதியாக இருக்கிறார் என்றும் பலவிதமான கருத்துகளை இணையத்தில் உலவ விட்டு வருகின்றனர். இதேபோல தொடர்ந்து எதற்கும் பேசாமல் இருந்தால் விரைவில் வெளியேறிவிடுவார் என்று கருத்து பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











