For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சினேகனின் பொம்மி வீரன் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அமீரும் யுவனும்

|
Thotari Press meet : தொரட்டி பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிஞர் ஸ்நேஹன் பேச்சு- வீடியோ

சென்னை: பிக் பாஸ் சீசன் 1 புகழ் கவிஞர் சினேகன் தயாரித்து நடிக்கும் பொம்மி வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அமீருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் சினேகன் நன்றி தெரிவித்துள்ளார்.

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, தோழா தோழா, அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் போன்ற பிரபலமான பாடல்களை கவிஞர் சிநேகன் எழுதியிருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவரை யார் என்றே தெரியாது. ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் பங்கு பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக ஆகிவிட்டார்.

Snehans Bommi Veeran First Look poster releases

அந்நிகழ்ச்சியில் இறுதி வரை போராடி, கடைசியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தாலும், அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் வரத் தொடங்கியது.

இப்போது அவர் தயாரிப்பிலும் இறங்கி பல படங்களை துவங்கினார். அந்த வரிசையில் கணேஷ் பாபு இயக்கத்தில் துவங்கிய பனங்காட்டு நரி படம் இன்னும் முடிவடையவில்லை. அந்த நிலையில் அடுத்த படைப்பை தயார் செய்ய நினைத்த சினேகன் இன்று விநாயகர் சதுர்த்தியான இன்று ஊடக நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

படத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி

நான் உங்கள் சினேகன்

ஊடக நண்பர்களுக்கும், வலைதள நண்பர்களுக்கும், என் வளர்ச்சியில் அக்கறை கொண்ட உலகம் முழுக்க உள்ள நட்புறவுகளுக்கும் வணக்கம்.

நான் தயாரித்து நடித்து வெளி வரும் முதல் படமான பொம்மி வீரன் திரைப்படத்தின் முதல் பார்வையை இன்று இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இருவரும் இணைந்து வெளியிட்டு என் நட்புக்கு பலம் சேர்த்து வாழ்த்தி இருக்கிறார்கள்.

அவர்களோடு, இதுவரை நீங்கள் தந்த நட்பும், ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையோடு எனது இந்த புதிய பயணத்தை தொடருகிறேன்.

அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்

எத்தனையோ நல்ல உள்ளங்களை சம்பாதித்த ஸ்நேஹன், அவர் எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி பெற வேண்டும். இசை அமைப்பாளர் தாஜ்நூர், நிகில் முருகன் ஆகியோர் சினேகன் முயற்சிகளுக்கு பலம் சேர்த்தனர்.

English summary
Snehan has thanked director Aamir and composer Yuvan Shankar Raja for releasing the first look poster of the film 'Bommy Veeran', which is being produced by the actor Snehan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more