twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவரு சினேகனுக்கே டஃப் கொடுப்பாரு போல.. கண்டபடி கட்டிப்பிடித்த வேல்முருகன்.. பறக்கும் மீம்கள்!

    |

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் சும்மா பாட்டு பாடிக்கிட்டு அனிதாவை அழ வைத்து வந்த வேல்முருகனுக்கு சனம் ஷெட்டியை ஜோடியாக்கி எனர்ஜி பூஸ்டரை தூண்டி விட்டார் பிக் பாஸ்.

    அவரும், எல்லாரையும் விட குதி குதியென குதித்து, சிறந்த டான்ஸர் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.

    எல்லாத்தையும் விட ஹைலைட்டாக சனம் ஷெட்டியை அப்படி புடிச்சு தூக்கி பிக் பாஸ் ரசிகர்களை கதற விட்டு கலக்கினார்

    இவர் தான் வின்னர்

    இவர் தான் வின்னர்

    வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள பாட்டுக்கு வேல்முருகன், சனம் ஷெட்டிக்கே இடம் கொடுக்காம ஆடுனாரு என மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தி அப்பவே ட்ரோல் பண்ணாரு.. ஆனால், கடைசியா பார்த்தா அதிக ஓட்டுப் போட்டு ஹவுஸ்மேட்களே வேல்முருகனை சிறந்த ஆண் டான்ஸர் என பட்டம் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள்.

    கட்டிப்பிடி வாத்தியார்

    கட்டிப்பிடி வாத்தியார்

    பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில், ஒரு பெண் போட்டியாளர்களையும் விடாமல் கட்டிப் பிடித்து கலக்கிய சினேகனுக்கு கட்டிப்பிடி வாத்தியார் என்ற பட்டத்தையே பிக் பாஸ் ரசிகர்கள் கொடுத்திருந்தனர். அதற்கு பிறகு வேறு எந்த பிக் பாஸ் போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களை இந்த அளவுக்கு முரட்டுத் தனமாக கட்டித் தழுவவில்லை.

    செம டஃப் கொடுப்பாரு போல

    செம டஃப் கொடுப்பாரு போல

    இந்நிலையில், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டில் நடிகை சனம் ஷெட்டி மற்றும் விஜே அர்ச்சனாவை கட்டிப் பிடித்த காட்சிகளை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், இப்படி வெறித்தனமாக அன்பை வெளிப்படுத்துகிறாரே இவரு சினேகனுக்கே செம டஃப் கொடுப்பாரு போல என வாய் பிளந்து பார்த்தனர்.

    எனக்கு என்ன மறுவாத

    எனக்கு என்ன மறுவாத

    எம் மகன் படத்தில் நடிகர் நாசர் பேசும் வசனத்தை மீம் கிரியேட்டர்கள் வைரல் டெம்பிளேட்டாக பயன்படுத்தி வருகின்றனர். நாசர் முகத்துக்கு பதிலாக சினேகன் முகத்தை எடிட் செய்து வைத்து, இதெல்லாம் அவரே பண்ணிட்டா அப்புறம் எனக்கு என்ன மறுவாத என கேட்பது போல வெளியாகி உள்ள மீம் தீயாக பரவி வருகிறது.

    எல்லை மீறுகிறாரா?

    எல்லை மீறுகிறாரா?

    சனம் ஷெட்டியை கட்டிப் பிடிக்கும் போது வேல்முருகன் ரொம்பவே எல்லை மீறியதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு திட்டித் தீர்த்தனர். முன்னதாக ரியோ ராஜ் ரம்யா பாண்டியனை தூக்கியது, போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்வது எல்லாம் பிக் பாஸ் வீட்டில் சகஜம் பாஸ் என தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    Meme creators compared Snehan and Velmurugan hugging in Bigg Boss Tamil 4 house. Recently Velmurugan hugs Sanam Shetty and Archana photos goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X