கொட்டும் மழையில் செம ரொமான்ஸ்... சினேகன், கன்னிகாவின் வைரல் வீடியோ!
சென்னை : சினேகனின் மனைவி கன்னிகா ரவி மழையில் சொட்ட சொட்ட நனைந்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பலரின் இதயத்தை வென்றுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அமுதா ஒரு ஆச்சர்யக்குறி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் கன்னிகா ரவி.
திரைப்படம் ஒன்றில் கூட நாயகியாக நடித்த இவர் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2,500க்கும் மேற்பட்ட பாடல்கள்
தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தீவிர அரசியலில்
சினேகன் பிக்பாஸ் சீசன் 1ல் அவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானார் சினேகன். மேலும், பிக் பாஸ் சீசன் 1ல் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தி வரும் சினேகன் உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்.

காதல் திருமணம்
சினேகனும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையுமான கன்னிகாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், ஜூலை 29 ஆம் தேதி உலக நாயகன் கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுத்த இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

சினேகனுக்கு ஏற்ற சினேகிதி
சினேகனின் மனைவி கன்னிகாவும் தான் கணவருக்கு ஏற்ற சரியான ஜோடிதான் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். சமீபத்தில், கன்னிகா சிலம்பம் சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலர் பார்ப்பதற்கு பூனை போல இருந்தாலும சினேகனுக்கு ஏற்ற சினேகிதிதான் என்று அவரை பாராட்டினர்.
சொட்ட சொட்ட நனைந்து
இந்நிலையில், சினேகனும் அவரது மனைவி கன்னிகாவும் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் கையில் குடையை பிடித்தபடி , மழை நீரில் கன்னிகா துள்ளி ஆடுவதை ரசித்து ரசித்து வீடியோ எடுத்துள்ளார் சினேகன். இந்த வீடியோ பலரின் மனதை வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications











