சினேகனை தத்தெடுத்துக் கொண்ட கமல்ஹாசன்.. கண்ணீரில் குடும்பம்.. அடடே இந்த விஷயம் எப்போ நடந்துச்சு!
சென்னை: பாடலாசிரியர் சினேகனின் தந்தை கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி மறைந்தார். சினேகனின் தந்தை பெயர் சிவசங்கு. அவர் மறையும் போது அவரது வயது 102. இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற, நம்மவர் நூலகம், படிப்பகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சினேகனைத் தான் தத்தெடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதில் போட்டியாளராக பங்கு கொண்டவர்களில் ஒருவர் பாடலாசிரியர், கவிஞர் சினேகன். இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக செல்ல இவரும் முக்கியமான காரணம். வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் மருத்துவ முத்தம் என்ற ஒன்றைக் கொடுத்து சமாதானப்படுத்துவது, ஆறுதல் படுத்துவது என இருந்தார். கடைசி வரை வீட்டில் இருந்த இவர், டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் இரண்டாவது இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல்களை கொடுத்தவர் சினேகன். இயக்குநர் அமீரின் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் இடம் பெற்ற ஆராரிராரோ என்ற ஒற்றைப் பாடல் போதும் இவரது கவித்திறனும் பாடல்களுக்காக வார்த்தைகளைக் கோர்க்கும் வல்லமையும் எவ்வளவு செறிவானது என்று. தமிழ் சினிமா கொண்டுள்ள, ஆகச்சிறந்த பாடலாசிரியர்களுல், கவிஞர்களுல் சினேகனுக்கு என்றைக்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து இருக்கும்.

கவிஞர் சினேகன்: இப்படி இருக்கையில் அவரது முயற்சியால் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிரிப்பட்டியை அடுத்த புதுக்கரியப்பட்டியில் நம்மவர் நூலகம், படிப்பகம் மற்றும் கலைக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர், மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, சினேகன் குறித்தும் அவரது தந்தை குறித்தும் அவர் பேசியது குறித்த பேச்சுக்கள் வேகமாக பரவி வருகிறது.
தத்து மகன்: கமல்ஹாசன் பேசுகையில், " எனக்கு சினேகனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரியும். அவரை எனக்கு மிகவும் பிடிக்கவும். அவரது தந்தையிடம் சொல்லாமல் சினேகனை நான் தத்தெடுத்துக் கொண்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்த சினேகன் மற்றும் சினேகனின் மனைவி கன்னிகா ரவி என இருவரும் மிகவும் எமோஷனலாகி கைகளை கூப்பியபடி நின்று கொண்டு இருந்தார்கள். இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், சினேகனின் தந்தையாரின் உருவப்படம் திறப்பு விழாவும் நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











