»   »  ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்ட கற்றுக்கொடுத்த சூர்யா: வைரலாகும் புகைப்படங்கள்

ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்ட கற்றுக்கொடுத்த சூர்யா: வைரலாகும் புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

சூர்யா, ஜோதிகா தம்பதி அண்மையில் தான் தங்களின் 10வது திருமண நாளை கொண்டாடினர். சூர்யா எங்கு சென்றாலும் ஜோதிகாவை அழைத்து செல்வார். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் சூர்யா ஜோதிகாவை பார்க்கும்போது அவரின் கண்களில் காதல் தெரிகிறது.

So cute: Suriya teaches Jyothika to ride a bullet

எஸ் 3 படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா நேரம் கிடைக்கும்போது எல்லாம் குடும்பத்தாருடன் செலவிடுகிறார். இந்நிலையில் சூர்யா ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்டக் கற்றுக் கொடுத்துள்ளார்.

அவர் புல்லட் ஓட்ட கற்றுக்கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. சூர்யா எஸ் 3 படத்தை முடித்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார்.

விக்னேஷ் படத்தை அடுத்து அவர் முத்தையாவின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Photos of Suriya teaching his wife Jyothika to ride a bullet has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil