டி43 படத்தோட ரெண்டாவது பயணத்துல கலந்துக்கறது உற்சாகமா இருக்கு... மாளவிகா ஹாப்பி அண்ணாச்சி
சென்னை : டி43 படத்தின் சூட்டிங் வரும் மாதத்தில் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் சூட்டிங்கில் உள்ள தனுஷ் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில் டி43 படத்தின் இரண்டாவது பயணத்தில் இணைவது உற்சாகமாக உள்ளதாக நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

தனுஷின் அடுத்த படம்
நடிகர் தனுஷ்ஷின் டி43 படம் கொரோனா காரணமாக சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் தி க்ரே மேன் சூட்டிங்கிற்காக தனுஷ் அமெரிக்காவில் உள்ள நிலையில் அவரது வருகைக்காகவும் படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

ஜூலையில் சூட்டிங்
இதையொட்டி டி43 படத்தின் சூட்டிங் வரும் ஜூலை மாதத்தில் துவங்கவிள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பு சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தது. நடிகர் மகேந்திரனும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விரைவில் ரிலீஸ்
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ள நிலையில், ஜூலையில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார்.

மாளவிகா உற்சாகம்
இந்நிலையில் டி43 படத்தின் இரண்டாவது பயணத்தில் இணையவுள்ளது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றியை அவர் எதிர்நோக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











