மலேசியாவில் வெளியிட தடை.. தர்பார் சோலோ ரிலீஸ் இல்லை.. தர்பாருக்கு காத்திருக்கிறது பல தடைகள்?

Recommended Video

முருகதாஸின் சந்திரமுகி 2 | DARBAR SPECIAL INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படம் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் பெரிய போட்டிகள் இன்றி சோலோ ரிலீசாக வெளியாகிறது.

ஆனால், தர்பார் படம் சோலோ ரிலீஸ் இல்லை பல பெரிய படங்களுடன் போட்டியாக வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

2.0 படத்திற்கு வாங்கிய கடன் தொகையை லைகா நிறுவனம் திருப்பி செலுத்தாத காரணத்தால் மலேசியாவில் ரிலீஸ் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

பொங்கல் போட்டி

பொங்கல் போட்டி

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் வெளியானது. ரஜினியின் பேட்ட படத்துக்கு அஜித்தின் விஸ்வாசம் படம் செம்ம போட்டியாக ரிலீசானது. இரு படங்களும் நூறு கோடிக்கு மேல் வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் தெரிவித்தன.

சோலோ ரிலீஸ்

சோலோ ரிலீஸ்

ஆனால், இந்த பொங்கலுக்கு ரிலீசாகும் தர்பார் படத்துக்கு தமிழ் நாட்டில் போட்டி இல்லை. இந்த வாரம் ரஜினியின் தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த வாரம் தான் தனுஷின் பட்டாஸ் போட்டிக்கு வருகிறது.

முதல் நாள் கலெக்‌ஷன்

முதல் நாள் கலெக்‌ஷன்

பேட்ட படத்தை போல ரஜினியின் தர்பார் படத்துக்கு தமிழ்நாட்டில் முதல் நாள் கலெக்‌ஷன் பாதிக்காது. மேலும், முதல் ஒரு வாரத்திற்கு ரஜினியின் தர்பார் செம்ம கலெக்‌ஷனை தமிழ்நாட்டில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் போட்டி

பாலிவுட்டில் போட்டி

ஆனால், தர்பார் படம் தமிழ்நாட்டை மட்டும் டார்கெட் செய்து வெளியாகவில்லை. பாலிவுட்டில் தர்பார் படத்துக்கு போட்டியாக தீபிகா படுகோனின் சபாக் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. கோலிவுட்டை விட பாலிவுட்டை அதிகளவில் டார்கெட் செய்துள்ள தர்பார் படம் தீபிகா படுகோனின் சபாக் படத்தை வசூல் ரீதியாக வீழ்த்துகிறதா என்பதை பார்ப்போம்.

அல்லு அர்ஜுன்

அதே சமயம் டோலிவுட்டில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ஆள வைகுந்தபுரமுலோ படமும் இந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் நடந்த அந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், ரஜினிகாந்தின் தர்பார் படத்தை தெலுங்கில் வரவேற்பதாக அல்லு அர்ஜுன் பேசியிருந்தார்.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ரஜினியின் தர்பார் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழில் பெரிய படங்கள் தர்பார் படத்துக்கு போட்டியாக வெளியாகவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் தர்பார் படத்துடன் மோத சரியான போட்டி படங்கள் ரிலீசாகின்றன.

100 கோடி வசூல்

100 கோடி வசூல்

வியாழக் கிழமை வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார் படம் முதல் வாரத்திலேயே 100 கோடி கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பியுள்ளதால், ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொங்கல் விருந்து தியேட்டர்களில் காத்திருக்கிறது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

இந்தியாவில் தர்பார் படம் வரும் ஜனவரி 9ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் (நாளை) ஜனவரி 8ம் தேதியே ரிலீசாகிறது. அமெரிக்காவில் வாழும் ரஜினி ரசிகர்களுக்குத் தான் இந்த முறை தலைவர் தரிசனம் முதலில் கிடைக்கப்போகுது.

மலேசியாவில் தடை

மலேசியாவில் தடை

ஆனால், மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட டி.எம்.ஒய் நிறுவனம் தடை கோரியுள்ளது. 2.0 படத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகையை லைகா நிறுவனம் திருப்பி தராததால், தர்பார் படத்தை மலேசியாவில் ரிலீஸ் செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தை அந்த நிறுவனம் நாடியுள்ளது. 4.99 கோடியை டெபாசிட் செய்யாமல் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X