இத்தனை ஹாஷ்டேக்குகளா.. ட்விட்டரை தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 10க்கும் மேற்பட்ட ஹேஷ்டேகுகளை உருவாக்கி இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் 'சும்மா அதிருதுல்ல' பஞ்ச் டயலாக் மாதிரி ரஜினியின் பிறந்த நாள் ஹாஷ்டேகுகள் சமூக வலைதளங்களை அதிர வைத்து வருகின்றன.

ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் மற்றும் பல முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களும் ரஜினி ஹாஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பட பூஜையுடன் பர்த்டே

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 168' பட பூஜை நேற்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டது. அதனோடு சூப்பர்ஸ்டார் பர்த்டேவும் சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ க்ளிப்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியளவில் டிரெண்டிங்

HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. சுமார் இரண்டரை லட்சம் பேர் அந்த ஹாஷ்டேகில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

10 ஹாஷ்டேக்குகள்

டிரெண்டிங்கில் எந்த ஹாஷ்டேக் முதலிடம் பிடிக்கிறது என்ற போட்டி பொதுவாக இருப்பது வழக்கம். ஆனால், ட்விட்டர் டிரெண்டிங்கில் இருக்கும் பெரும்பான்மையான ஹாஷ்டேக்குகள் இன்று ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள் ஹாஷ்டேக்குகள் தான். இதில் இந்தியளவில் 7 ஹாஷ்டேக்குகளும் சென்னை அளவில் 10 ஹாஷ்டேகுகளும் டிரெண்டாகி வருகின்றன.

70ஸ் கிட்ஸ் டு 2கே கிட்ஸ் வரை

1975ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை ரஜினிகாந்த் தொடங்கி, இன்றளவும் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டாராக அந்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். இதனை நினைவு கூறும் விதத்தில் 70ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் அனைவருக்கும் ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என இந்த மீம் வழியாக இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் ரசிகர்கள், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய், ரஜினி இருக்கும் புகைப்பட தொகுப்புகளை பதிவிட்டு, சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள்

அதேபோல, தல அஜித் ரசிகர்களும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித், ரஜினி இருக்கும் புகைப்பட தொகுப்புகளை பதிவிட்டு, சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X