Sobhita Dhulipala: மகள் வயசு நடிகையுடன் இப்படியா உரசியபடி நிற்பது.. அனில் கபூரை விளாசும் ஃபேன்ஸ்!

மும்பை: பொன்னியின் செல்வன் 2 படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலா நடிகர் ஆதித்யா ராய் கபூரை கட்டிப்பிடித்து நிற்க அவருக்கு பின்னாடி அவரை ஏக்கத்துடன் கட்டிப் பிடித்தபடி மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூர் உரசியபடி நிற்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் சோபிதா துலிபாலா.

Sobhita Dhulipala and Anil Kapoor brutally trolled for this picture

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சேட்டைக்கார பொண்ணு சோபிதா: பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா சக நடிகைகளான த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கேரவனிலும் பண்ணிய ஏகப்பட்ட சேட்டைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களாகவும் போட்டோக்களாகவும் எடுத்துப் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Sobhita Dhulipala and Anil Kapoor brutally trolled for this picture

பொன்னியின் செல்வன் 2 படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் கதாபாத்திரம் டீலில் விடப்பட்டாலும் வானதியாக நடித்த சோபிதா துலிபாலாவை இடைவேளையின் போதே அருள்மொழி வர்மனுடன் இயக்குநர் மணிரத்னம் ஜோடி சேர்த்து விட்டார். முதல் பாகத்தில் ராட்சச மாமனே பாடலுக்கு கார்த்தியுடன் செம ஆட்டம் போட்ட சோபிதா துலிபாலா இந்த பாகத்தில் யானை பல்லக்கில் ஜெயம் ரவியுடன் வரும் காட்சியில் கலக்கி இருந்தார்.

தி நைட் மேனேஜர் வெப்சீரிஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான தி நைட் மேனேஜர் முதல் சீசன் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அந்த வெப்சீரிஸுக்கான ப்ரமோஷனை படு சூடாக ஆரம்பித்துள்ளனர். லீடு ரோலில் நடித்த ஆதித்யா ராய் சோப்ரா, சோபிதா துலிபாலா மற்றும் அனில் கபூர் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோவை சோபிதா துலிபாலா இன்ஸ்டாவில் ஷேர் செய்த நிலையில், ரசிகர்கள் பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Sobhita Dhulipala and Anil Kapoor brutally trolled for this picture

அனில் கபூரை விளாசும் ரசிகர்கள்: ஏற்கனவே 30 முறைக்கு மேல் முதல் சீசனிலேயே முத்தக் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படியொரு போஸை பார்த்த ரசிகர்கள் சோனம் கபூரின் அப்பா செய்யுற காரியமா இது என விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X