போன வாரம் சமந்தாவுக்கு கல்யாணம்.. குட் நியூஸ் சொல்ல ரெடியான நாக சைதன்யா - சோபிதா தம்பதி? ஒரே ஹேப்பி!
சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா தம்பதியர் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் நடிகர் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம். இவர் ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து 2021ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்திருந்தார். அதன் பின்னர் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தம்பதியர் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் முதல் குழந்தையை வரவேற்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் நாக சைதன்யா, இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தம்பதியர்களாக மாறிய பின்னர் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் புகைப்படமாக வெளியிட்டுக் கொண்டு இருந்தார். குறிப்பாக திருமணத்திற்கு மறுநாள் நாக சைதன்யாவுடன் படுக்கை அறையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து அலப்பறை கூட்டினார்.

மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தபோது இருவரும் பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்தும் பெற்றனர். இவர்களின் விவாகரத்து ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்தது. அதன் பின்னர் நாக சைதன்யா தரப்பில் ரூபாய் 200 கோடிகள் ஜீவனாம்சமாக அளிக்க முன் வந்தனர். ஆனால் சமந்தா அந்த பணத்தை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்.
சமந்தா: அதன் பின்னர் கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்படி இருக்கும்போது, சமந்தா எப்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் கேட்டு வந்தனர். அவ்வப்போது சமந்தா அவருடன் காதலில் இருக்கிறார், இவருடன் காதலில் இருக்கிறார் என்று எல்லாம் கிசுகிசுக்கள் பரவி வந்தது. இப்படி இருக்கும்போது, நடிகை சமந்தா கடந்த டிசம்பர் 1ஆம் தேதி இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பம்: இத்தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் இந்த மகிழ்ச்சியான செய்தியை உலகிற்கு சொல்லப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், நெருப்பில்லாமல் புகையாது என்ற மனநிலையில் ரசிகர்கள் இப்போதே அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











