100 சவரன் தேறும் போல.. நாக சைதன்யா - சோபிதா திருமணம் நிறைவு.. மணப்பெண்ணை பார்த்து மலைத்த ரசிகர்கள்!
சென்னை: 3000 கோடிக்கும் மேல் நாகார்ஜுனாவுக்கு சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மகன் நாக சைதன்யாவின் 2வது திருமணத்துக்கு பரிசாக 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை நாகார்ஜுனா பரிசாக வழங்கியிருந்தார். மேலும், தனியாக இருவரும் வசிக்கும் விதமாக ஹைதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்றையும் பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாகார்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இன்று இரவு 8.13 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுக்கு தாலி கட்டி மனைவியாக மாற்றிக் கொண்டார். சோபிதா துலிபாலாவின் உடல் முழுக்க ஜொலி ஜொலித்த நகைகள் தான் ரசிகர்களின் கண்களை பறித்துள்ளன.

சிரஞ்சீவி, ராம் சரண், ராஜமெளலி உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். பிரபலங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நாகார்ஜுனா தான் களத்தில் இறங்கி செய்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் நடிகைக்கு டும் டும் டும்: சோபிதா துலிபாலாவுக்கு ஏற்கனவே லவ் பிரேக்கப் ஆன நிலையில், மேரேஜ் பிரேக்கான நாக சைதன்யா மீது காதலில் விழ கடந்த சில ஆண்டுகளாக இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. சமந்தாவை அதிகாரப்பூர்வமாக நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோபிதாவை நிச்சயம் செய்துக் கொண்டார். தனது அடுத்த படமான தண்டேல் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த ஆண்டு இறுதியிலேயே அவசர அவசரமாக சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக் கொண்டார்.

100 சவரன் தேறும் போல: ஜொலிக்கும் தங்க நிறத்தாலான பட்டுப் புடவை மற்றும் உடல் முழுக்க தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அணிந்துக் கொண்டு சோபிதா துலிபாலா பவ்யமாக கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சுமார் 100 சவரன் நகை உடல் முழுக்க இருக்கும் போலத் தெரிகிறதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு: நடிகை சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்யும் போது அவரிடம் பெரிதாக சொத்துக்கள் எல்லாம் இல்லை. அதன் பின்னர் உழைத்து பல படங்களில் நடித்து சம்பாதித்த சமந்தா தற்போது 80 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரியாக உள்ளார். நடிகை சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வரும் நிலையில், இப்பவே அவரிடம் 10 முதல் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











