Naga Chaitanya - நாக சைதன்யாவுடன் காதலா?.. பொன்னியின் செல்வன் ஞாபகத்தில் இருக்கேன்ப்பா - நடிகை விளக்கம்
சென்னை: Naga Chaitanya (நாக சைதன்யா) நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் என்று பரவிய தகவல் குறித்து நடிகை சோபிதா விளக்கமளித்துள்ளார்.
நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தனது நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவந்தார்.

திருமண உறவு முறிவு: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துவிட்டு தனித்தனி பாதையில் சென்றுகொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு இருவருமே அமைதியாக இருந்தனர்.
மௌனம் கலைத்த நாக சைதன்யா: நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிறது. முறைப்படி விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாங்கள் அவரவர் வாழ்க்கைக்கு நகர்ந்துவிட்டோம். எங்களின் அந்த திருமண வாழ்க்கை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. சமந்தா இனிமையானவர். அவர் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியானவர் என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பலரிடமும் கவனம் ஈர்த்தது.

காதலில் நாக சைதன்யா: இதற்கிடையே நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இருவரும் ஜோடியாக வெளியில் சென்ற புகைப்படமும், இருவரும் லண்டனில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியானதை அடுத்து இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டது என்று சோஷியல் மீடியாவில் பேச்சு எழுந்தது. ஆனால் இருவருமே இதுகுறித்து எதுவும் பேசவில்லை.
என்னது லவ்வா?: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் சோபிதா, " என்னை பற்றி சமீபமாக காதல் வதந்தி பரவிவருகிறது. யாரோ ஏதோ சொல்கிறார். அதற்காக வருத்தப்படுவதிலோ, ரியாக்ட் செய்வதிலோ எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லாதபோது அதற்கு என்று அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

பயப்பட வேண்டிய அவசியம் இல்லை: அதேபோல் எந்தத் தவறும் செய்யாதபோது எதற்காக பயப்பட வேண்டும். அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனது பணியை நான் செய்துகொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் என்ற வெற்றி படத்தில் நடித்த மகிழ்ச்சியின் நினைவாக இருக்கிறேன்" என்றார். சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











