சுகுமாரன் குறூப்பில் துல்கர் சல்மானுடன் டூயட் பாடும் சோபிதா துலிபாலா
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் குறூப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது 1980களில் கேரளாவை மிரளவைத்த சுகுமார குரூப் என்ற கொள்ளைக்கும்பலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருக்கிறார்.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கர்வான் என்ற பாலிவுட் திரைப்படத்திற்கு பிறகு, அவருக்கு பாலிவுட்டில் இரண்டாவது படமாக உருவாகியுள்ள தி சோயா ஃபேக்டர் என்கிற படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் எழுத்தாளர் அனுஜா சவுகான் எழுதிய தி சோயா ஃபேக்டர் நூலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
தற்போது மலையாளத்தில் குறூப் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. சுகுமார குறூப் என்கிற கொள்ளை குறூப் எண்பதுகளில் கேரளாவை பிரமிக்க வைத்த கொள்ளைக்காரர்கள்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கவுள்ளார். இதில் குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் துல்கர் சல்மானை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சுகுமார குறூப் கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு அவன் எங்கோ தப்பி விட்டதாக மட்டும் தகவல் உள்ளது. ஆனால் அவன் எங்கு சென்றான்? என்ன ஆனான்? என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை. இது பற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து குறூப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம், ஸ்ரீநாத் ராஜேந்திரன். இந்தப் படத்தில் குறூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவரை தேடும் போலீஸ் கதாபாத்திரத்தில் இந்திரஜித் நடிக்கிறார். துல்கர் சல்மானும், இந்திரஜித்தும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருக்கிறார். இவர் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.௦ என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். நடிகை சோபிதா துலிபாலாவிற்கு இது இரண்டாவது மலையாளம் திரைப்படமாகும். இவர் ஏற்கனவே நடிகர் நிவின் பாலி நடித்த மூத்தன் திரைப்படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக விருக்கிறது.


Click it and Unblock the Notifications











