Sobhita Dhulipala Haldi Ceremony : இப்படியொரு சடங்கா? ஓவர் சந்தோஷத்தில் டையர்ட் ஆன சோபிதா துலிபாலா!
ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். நாக சைதன்யா - சமந்தா திருமணமே மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அந்தத் திருமணத்தைவிட பலமடங்கு பிரமாண்டமாக இந்தத் திருமணத்தை நடத்த நாகர்ஜுனா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றது. கடந்த சில நாட்களாகவே திருமணத்திற்கு முன் நடைபெறும் சடங்குகள் நடைபெற்று வருவதால் அது தொடர்பான புகைப்படங்களை சோபிதா பகிர்ந்துள்ளார்.

நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருந்தனர். இவர்கள் டேட்டிங் செல்வது தொடர்பாக தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது. மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இவர்களது நிச்சயதார்த்தம், ஹைதராபாத்தில் உறவினர்கள் முன்னிநிலையில் நடைபெற்றது. இது தொடர்பாக நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
நெட் ஃபிளிக்ஸ்: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது திருமணம் தொடர்பாக டாக்குமெண்டரியை உருவாக்கி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் தங்களது திருமணம் தொடர்பாக டாக்குமெண்டரி படத்தினை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஹல்தி : ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட துலிபாலா, கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த சோபிதா துலிபாலா அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இவர் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நலங்கு புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்திருந்த சோபிதா, தற்போது தனது பாட்டி மற்றும் தாயாரின் பாரம்பரிய நகைகளை அணிந்துகொண்டு ஹல்தி சடங்கின்போது எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அடர் மெருன் நிறத்தில் அட்டகாசமான புடவை அணிந்துள்ள சோபிதா பார்ப்பதற்கே தேவதைபோல் உள்ளார். மேலும் இந்த சடங்கிற்கு ராத சடங்கு என பெயர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திருமண பரிசு: இவர்களின் திருமணத்திற்கு நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா , 2.5 கோடி மதிப்பில் லெக்சஸ் காரினை பரிசாகக் கொடுக்க வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இவர்களது திருமணம் நாகர்ஜுனாவின் திருமண மண்டபமான அன்னபூர்ணா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











