Sobhita Dhulipala: கல்யாண குஷியில் சோபிதா துலிபாலா.. இணையத்தைக் கலக்கும் நலங்கு போட்டோஸ்!
ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். நாக சைதன்யா - சமந்தா திருமணமே மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அந்தத் திருமணத்தைவிட பலமடங்கு பிரமாண்டமாக இந்தத் திருமணத்தை நடத்த நாகர்ஜுனா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். மேலும் அதற்கான ஏற்பாடுகளும் ராப்பகலாக நடைபெறுகின்றது. இன்னும் 4 நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளதால், மணப்பெண்ணுக்கு நலங்கு வைத்துள்ளனர். அது தொடர்பாக சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருந்தனர். இவர்கள் டேட்டிங் செல்வது தொடர்பாக தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது. மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இவர்களது நிச்சயதார்த்தம், ஹைதராபாத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்பாக நாகர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இவர்களது திருமணத் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் 4ஆம் தேதி, அதாவது வரும் புதன் கிழமை ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரமாண்டமான ஸ்டூடியோவான அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே கூட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

நெட் ஃபிளிக்ஸ்: மேலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது திருமணம் தொடர்பாக டாக்குமெண்டரியை உருவாக்கி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் தங்களது திருமணம் தொடர்பாக டாக்குமெண்டரி படத்தினை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நாக சைதன்யா: நாக சைதன்யாவைப் பொறுத்தவரையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இவர்களது பிரிவினை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நலங்கு: ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட துலிபாலா, கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த சோபிதா துலிபாலா அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இவர் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நலங்கு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் சோபிதா துலிபாலா வெட்கம் நிறைந்த முகத்துடன் பூரிப்புடன் காணப்படுவதால் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











