Sobhita Dhulipala: சமந்தாவுக்கு திருமணம்.. செம சந்தோஷத்தில் பொன்னியின் செல்வன் ‘வானதி’.. ட்விஸ்ட்டு!

ஹைதராபாத்: பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவின் சகோதரிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்த நிலையில், சோபிதா துலிபாலாவுடன் தான் டேட்டிங் செய்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் அடுத்து திருமணம் நடக்கப் போகிறதா என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வந்த நிலையில், அதற்கு முன்னதாக தனது சகோதரியின் திருமனத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கிறார் சோபிதா துலி பாலா. துல்கர் சல்மானின் க்ரூப் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்திய சோபிதா துலிபாலா கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sobhita Dhulipala sister Samanta Dhulipala wedding pictures trending in social media

அருள்மொழி வர்மனுக்காகவே பிறந்து வளர்ந்தவள் வானதி என்றும் அவரை காதலித்து வரும் வானதி பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் ட்ரெய்லரிலேயே ஜெயம் ரவிக்கு மணிமகுடம் சூட்டும் விழாவுக்கு முன்னதாக வானதியுடன் தான் நடந்து வருவார் ஜெயம் ரவி.

சமந்தா திருமணம்

இந்நிலையில், தனது சகோதரி சமந்தா துலிபாலாவுக்கும் அவரது காதலர் சாஹில் என்பவருக்கு சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. சவுத் மீட்ஸ் நார்த் என கேப்ஷன் கொடுத்து வட இந்திய மாப்பிள்ளை சாஹிலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தனது தங்கை சமந்தாவுக்கும் திருமணம் ஆன போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் சோபிதா துலிபாலா.

Sobhita Dhulipala sister Samanta Dhulipala wedding pictures trending in social media

என்னது சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தாவா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளனர். டெல்லியை சேர்ந்த டாக்டர் சாஹில் குப்தாவுடன் சோபிதா துலிபாலாவின் சகோதரி சமந்தா திருமணக் கோலத்தில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கி உள்ளார் சோபிதா துலிபாலா.

இந்த மாதம் இறுதியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சோபிதா துலிபாலா வீட்டில் திருமண வைபவம் களைகட்டியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Sobhita Dhulipala sister Samanta Dhulipala wedding pictures trending in social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X