சோபிதாவுக்கு முதல் காதலர் நாக சைதன்யா இல்லை.. யார் தெரியுமா?.. இது வேற நடந்திருக்கா?
ஹைதராபாத்: நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கிறது. டோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திருமணங்களில் ஒன்றாக இவர்களது திருமணம் மாறியிருக்கிறது. முன்னதாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சைதன்யா அவரை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சோபிதா துலிபாலாவின் முன்னாள் காதலர் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் சொல்லிக்கொள்ளும்படியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கஸ்டடி திரைப்படமும், தூதா வெப் சீரிஸும் வெளியாகின. இவற்றில் கஸ்டடி கவிழ்த்துவிட்டாலும் தூதா வெப் சீரிஸ் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் திரைப்படம் வெளியாகிறது. இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

சமந்தாவுடன் பிரிவு: இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவுடன் சைதன்யாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தனது வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பினாலும்; அவர்களை ஒருவழியாக சமாதானப்படுத்தினார் நாக சைதன்யா. பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிவதாக அறிவித்தார்கள்.
சோபிதாவுடன் காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா அடுத்ததாக சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்தார். ஆரம்பத்தில் அதனை அவர் மறுத்தாலும் ஒருகட்டத்தில் இருவருக்குமான காதல் வெளியே தெரிந்துவிட்டது. பிறகு வீட்டு சம்மதமும் கிடைத்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதில் இருவீட்டாரும், அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதனைத் தொடர்ந்து எப்போது திருமணம் என்ற கேள்வி இருந்தது.
எப்போது திருமணம்: அந்தக் கேள்விக்கு சில நாட்கள் முன்பு பதில் கிடைத்தது. அதன்படி அவர்களது திருமணம் டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடக்கிறது. திருமண பத்திரிகையும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. முதலில் ராஜஸ்தானில்தான் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஹைதராபாத்தில் நடந்தால்தான் திரைத்துறையினர் மற்றும் பிற பிரபலங்கள் வருவதற்கு இன்னும் வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சோபிதாவின் முன்னாள் காதலர்: இந்நிலையில் சோபிதா துலிபாலாவின் முன்னாள் காதலர் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாக; பிரபல கவிஞர் மற்றும் ஃபேஷன் டிசைனர் பிரனவ் மிஷ்ரா என்பவரை காதலித்திருக்கிறார். ஒரு ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இருவரும் சந்தித்து; பிறகு காதலிக்க தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்கள் தீவிரமாக காதலித்த அவர்கள்; மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











